முதுமை என்னும் இலையுதிர் காலம் -தினமணி கட்டுரை
முதுமை பற்றிப் பல்வேறு இலக்கிய ஆதாரங்களுடன் அருமையான கட்டுரையைத் தந்திருக்கிறார் தி. இராசகோபாலன் தினமணி நாளிதழில் அதற்கான இணைப்பு ———– இது.
பல பதிவுகள், திரைப்படங்களில் ஒரு தகப்பன் தன் மகனை வளர்க்கும் போது பிற்காலத்தில் தன்னைப் பேணிக் காப்பாற்றுவான் என்னும் எதிர்பார்ப்புடன் செய்வதாகக் காட்டுவார்கள். அவ்வாறு மகன் காப்பாற்றாமற் போனால் வெறுப்பதாகவும். ஆனால் உண்மையான அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதானாலேயே ஏமாறுவதோ அல்லது ஒரு சமய சந்தர்ப்பத் துக்கு ஏற்றார்ப்போல் மாறுவதும் இல்லை. திருக்குறளை ஆதாரமாக்கி நான் மேற்குறிப்பிட்ட கருத்தை முன் வைக்கும் கட்டுரையின் இந்தப் பகுதி என்னை மிகவும் கவர்ந்தது.
—————————————
முதுமை எனும் இலையுதிர்காலத்தினால், முதியோர்கள் பெற வேண்டிய எச்சரிக்கை ஒன்று உண்டு. ஒரு தந்தை தம் மகனைப் படிக்க வைப்பதையோ, அவரைப் பணியில் அமர்த்துவதையோ, அவருக்குத் திருமணம் செய்து வைப்பதையோ தம் கடமை என்று எண்ணி ஆற்ற வேண்டும். இவற்றை எல்லாம் இன்றைக்கு நாம் செய்தால், எதிர்காலத்தில் அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்பில் செய்யக்கூடாது. இதனைச் சரியாகவே எச்சரித்திருக்கிறார் திருவள்ளுவர்.
தந்தை மகற்காற்றும் நன்றி என நவின்றார் திருவள்ளுவர். தந்தை மகற்காற்றும் உதவி என்று சொல்லவில்லை. காரணம், ஒரு தந்தை தம்முடைய தந்தையிடம் இருந்து எதைப் பெற்றாரோ, அதனையேத் தம் மகனுக்குத் திருப்பித் தருவதாக எண்ண வேண்டும். அதனால்தான் நன்றி எனக் கூறினார். இதனை ஆங்கிலக் கட்டுரையாளர் ஏனெஸ்டு பேக்கர், இம்முறையை ஒரு “ரிலே ரேஸ்’ என்றார். ஒருவர் பெற்ற மூங்கில் கழியை இன்னொருவரிடம் ஓடிப்போய் கொடுப்பதைப்போல ஆகும்.
————————————
image courtesy: plus.google.com