வள்ளுவர் கோட்டத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா? -தினமணி கட்டுரை
22.1.2016 தினமணியில் ஏரிகளைத் தூர்த்து, காடுகளை அழித்து நாம் சுற்றுச் சூழலை மிகவும் மோசமாகக் கெடுத் து விட்டோம் என்னும் கருத்தை விரிவாக ஆர்.எஸ்.நாராயணன் தந்திருக்கிறார்.
கட்டுரைக்கான இணைப்பு ———– இது.
கட்டுரையின் இந்தப் பகுதி நம் மனதில் தைப்பது:
————————————————————
மழை என்ற அமிழ்தத்தை நுங்கம்பாக்கம் ஏரி ஏந்தி நின்றது. இந்த ஏரியினாலும், மரங்களினாலும் நிலத்தடி நீரும் மேலூற்றுக் கிணறுகளும் நீர் வழிந்து நின்று நகரவாசிகளுக்கு உதவின. காலப்போக்கில் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏரி சுருங்கியது. 1960-லிருந்து நுங்கம்பாக்கம் ஏரியில் நகராட்சிக் குப்பைகளைக் கொட்டினர்.
இப்படிப் பல்லாண்டுக் காலமாகக் குப்பை கொட்டி மூடிய இடத்தில் கற்கள் கொட்டப்பட்டன. அங்கு வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது. நல்ல கலை உணர்வுடன் திருவாரூர் தேர் வடிவமைக்கப்பட்டு வள்ளுவருக்கு ஒரு கல் தேர் காணிக்கை வழங்கப்பட்டது. அமிழ்தத்தை ஏந்தி நீரை வழங்கிய ஏரியை அழித்துக் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டத்தைப் பார்க்கும்போது சிரிப்பதா? அழுவதா? “படிப்பது ராமாயணம். இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
———————————————————