கவலையே இல்லாமல் கடன் வாங்குகிறோமா?- தினமணி கட்டுரை
வீட்டுக்காக மட்டுமே கடன் வாங்கிய காலம் போய் கார், கைபேசி, விளையாட்டு மென்பொருள் வரை கடனில் வாங்கும் தலைமுறை மற்றும் கலாச்சாரம் வந்து விட்டது. இதன் ஆபத்துக்களை மிகுந்த கவலையுடன் அக்கறையுடன் விவரிக்கும் இரா.கதிரவனின் 26.1.2015 தினமணி கட்டுரைக்கான இணைப்பு ——-இது
கட்டுரையின் இந்தப் பகுதி என்னை மிகவும் பாதித்தது:
——————————————————-
இதில் சோகமான உண்மை என்னவென்றால், இந்த விளம்பர யுத்தத்துக்கு அந்த நிறுவனங்கள் செய்யும் பெரும் செலவு முழுதும், வாடிக்கையாளர்களான நமது தலையில்விழுகிறது என்பதுதான்.
இதன் இன்னொரு அம்சம், இத்தகைய விளம்பரங்கள், மனிதனின் – உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவற்றையே மாற்றி விடுகின்றன. வீடுகளில் செய்யப்பட்ட எளிய உணவு வகைகள், நொறுக்குத் தீனிகள் இப்போது மறக்கப்படுகின்றன. உடலுக்கு உபாதைத் தரும் பண்டங்களை வாங்க வேண்டும் என்று குழந்தைகள் நச்சரிக்கும் நிலைதான் எஞ்சுகிறது.
கடன் வாங்கும் பழக்கம்: சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், சாமான்ய மனிதன் நுழைய முடியாது என்று இருந்த வங்கிகள் இன்றைக்கு, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டன. ஏஂஈ – என்ற ஒரு கோட்பாடு, மாத சம்பளக்காரர்களை, எளிதான தவணை முறையில் பொருள்களை வாங்க, கடன் பெற, வங்கிகள் பெரும் உதவி செய்கின்றன.
ஆனால், சற்று பலகீனமான மன நிலையில் உள்ளவர்கள், இவற்றை சரிவரப் பயன்படுத்தாது, சக்திக்கு மீறி கடன் வாங்கும் பழக்கத்துக்கு ஆளாகி, ஆயுளுக்கும் கடன்காரர்களாக இருக்கின்றனர்.
—————————————-
(image courtesy:psdgraphics.com)