ஆப்பிரிக்க மாணவி மீது வன்முறை- தினமணி கண்டனக் கட்டுரை
தினமணியில் எஸ்.ஸ்ரீதுரை கட்டுரைக்கான இணைப்பு ——— இது.
கடந்த வாரம் பங்களூருவில் ஒரு ஆப்பிரிக்க மாணவன் காரைத் தாறுமாறாக ஓட்டி ஒருவர் உயிரிழக்க வைத்து அங்கிருந்து விரைந்து விட்டார். யதேச்சையாக வந்த ஆப்பிரிக்க தான்சேனிய மாணவியை ஒரு கும்பல் மானபங்கம் செய்து அவர் காரைக் கொளுத்தியது நாம் கற்காலத் தை விட மோசமான குரூரங்களை மனதில் வைத் திருக்கிறோம் என்பதற்கு அடையாளம். காவல் துறையோ பொது மக்களோ அந்தப் பெண்ணுக்கு உதவாதது இனவெறியின் தெள் ளத் தெளிவான கோரமுகம். நம் குழந்தைகளில் லட்சக்கணக்கில் வெளி நாடுகளில் வேலை படிப்பு என இருக்கிறார்களே. அவர்களுக்கு ஒன்று இது போல நடந்தால் நம் மனது பதறாதா? தமிழ் நாட்டில் தினமணி கட்டுரை இதைச் சாடுவதுடன் கும்பல்களின் வன்முறையைக் கண்டிக்கிறது. வேறு எந்த ஒரு பெரிய கண்டனமும் வரவே இல்லை. நாம் பண்பாட்டில் வெகு தூரம் போக வேண்டும்.
(image courtesy:imamin.in)