தமிழின் ஐம்பதாண்டுகால நாடகம் அசோகமித்திரன் பார்வையில்
தமிழ் ஹிந்துவில் தாம் எழுதி வரும் பத்தியில் அசோக மித்திரன் ஐம்பது ஆண்டுகாலமாய் தமிழ் நாடக மேடை அதாவது 1980களுக்கு முற்பட்ட ஐம்பது ஆண்டு காலகட்டத்தில் தம் பார்வையில் பட்ட தமிழ் நாடக மேடைக் கலைஞர்கள் மற்றும் நாடகங்கள் பற்றிய நினைவை ஒரு ஆய்வுக் கட்டுரையாயில்லாமல் தம் நினைவுகளிலிருந்து தருகிறா. ஞாநி பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமானது. ஞாநியின் பங்களிப்பு தெரு நாடகம் முதல் இன்றைய அவரது பரீக்ட்ஷா குழுவரையானது. இன்னும் இயங்குகிறார் 40 வருடத்துக்கும் மேலாக. முடிவில் அசோகமித்திரன் தாம் எழுதாமல் விட்ட இரண்டு நாடகங்கள் பற்றிக் குறிப்பிடும் போடு படைப்புக்களுக்கு அவர் தரும் முக்கியத்துவம் அதில் திருப்தி இல்லை எனில் அதை வாசிப்புக்குத் தருவதில்லை என்னும் கவனம் இரண்டையும் நமக்கு ஒரு முன்னுதாரணமாகக் கண்டு வியக்கிறோம். கட்டுரைக்கான இணைப்பு ————- இது.
(திருவான்மியுர் பனுவல் புத்தகக்கடையில் அவரை முதல் முதலாக ஒரு இலக்கிய அமர்வில் சந்தித்தேன். இரண்டு மணி நேரத்துக்கு மேல் அமர்ந்து எங்களுடன் பங்கேற்றார். அப்போது எடுத்த புகைப்படம் இது)