நேரத்தை ஏன் வீணாக்கக் கூடாது? தினமணி கட்டுரை
காலம் கடந்தது என்று சகஜமாக நாம் பயன்படுத்தி நொந்து கொண்டாலும் காலத்தை வீணடிப்பதில் நாம் இரண்டு விதமான அளவு கோல் வைத்திருக்கிறோம். சொந் த நேரத்தை வீணடிப்பதென்றால் அதற்கு ஒரு உச்சவரம்பாவது உண்டு. மற்றவர் நேரத்தை வீணடிப்பதென்றால் அதற்கு உச்சவரம்பே கிடையாது. மின்னணுத் தொழில்நுட்பம் பல இடங்களில் காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. மறுபக்கம் மின்னணு சாதனங்களில் நேரத்தை வீணடிக்கும் விஷயங்கள் அதிகம். பாறப்புறத் ராதாகிருஷ்ணன் தினமணியில் நேரத் தின் அருமையை வலியுறுத்தி நல்ல கட்டுரை ஒன்றைத் தந்திருக்கிறார். கட்டுரையின் இந்தப் பகுதி என்னை மிகவும் கவர்ந்தது:
———————————–
ஓர் ஆண்டின் மதிப்பை உணர வேண்டுமானால், வகுப்பில் தோல்வி அடைந்த மாணவனையும், ஒரு மாதத்தின் முக்கியத்துவத்தை அறிய முழுவளர்ச்சி அடையாத குழந்தையைப் பெற்றெடுத்த தாயையும், ஒரு வாரத்தின் அருமையை வாரப் பத்திரிகையின் ஆசிரியரையும், ஒரு நாளின் மகத்துவத்தை ஒரு நாள் வேலை இழந்த தினக்கூலி பணியாளரையும், ஒரு மணி நேரத்தின் பெருமையை நமக்காகக் காத்திருந்தவரையும், ஒரு நிமிஷத்தின் இன்றியமையாமையை ரயிலைத் தவற விட்டவரிடமும் ஒரு விநாடியின் அவசியத்தை விபத்தில் இருந்து தப்பியவரையும், ஒரு மில்லியன் விநாடியின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரையும் கேட்க வேண்டும்.
———————————
கட்டுரைக்கான இணைப்பு ——- இது.
(image courtesy:clipartpanda.com)