பனிச்சரிவில் வீரர்கள் உயிர் நீக்காதிருக்க -தமிழ் ஹிந்து தலையங்கம்
நாடு முழுவதுமே உறைபனியில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்காக சோகம் இருக்கிறது. உண்மையில் அவர்கள் உயிர் வாழும் காலத் திலேயே அவர்களது பணி பல ஆபத் துக்களாலானது. சிறு கவனக் குறைவும் பனியில் உடலின் ஒரு பகுதியையே காவு வாங்கி விடும். ஒரு கோப்பை தேனீர் அருந் துவது கூடப் பெரிய சவால். தில்லி சென்னை ரயில் பயணத்தில் சியாசல் கார்கில் பகுதிகளில் பணி புரிந்த வீரர்களுடன் உரையாடும் போது பல விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன். இந் தியா பாகிஸ்தான் அரசுகள் நினைத் தால் இந் தப் பகுதியில் பரஸ்பர நல்லெண் ணமும் புரிதலுமாக இரு நாட்டு வீரர்களின் உயிரைக் காக்க முடியும். தமிழ் ஹிந் து தலையங்கத் துக்கான இணைப்பு ———- இது.
கீழ்க்காணும் பகுதியில் ஹிந் து முன்வைக்கும் கருத் துக்கள் சிந்தனைக்குரியவை:
—————————————-
இந்த இடத்தில் ராணுவ வீரர்களைத் தங்க வைப்பதும் காவல் சாவடிகளை அமைப்பதும் அவர்களுக்கு வேளைக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் மிகுந்த சவாலான வேலை. அத்துடன் ஏராளமான மனித உழைப்பும் தேவைப்படுகிறது. எனவே, இரு நாடுகளுமே கூடிப் பேசி, இப்பகுதியில் ராணுவ வீரர்களை விலக்கிக்கொள்வது என்ற முடிவை எடுக்க வேண்டும். சிம்லா ஒப்பந்த அடிப்படையில், இப்பகுதியில் மோதல்கள் ஏற்படாமல் தடுக்கவும் பலப் பிரயோகம் செய்யாமல் தவிர்க்கவும் பேச்சு நடத்துவது என்று இரு நாடுகளுமே முன்னர் தீர்மானித்தன. அதைத் தீவிரப்படுத்தி இப்பகுதியை ராணுவப் படைகளற்ற பகுதியாக மாற்ற முனைய வேண்டும். அது இல்லாததால்தான், இரு நாடுகளுமே பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களைத் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கிறது. போர் வீரர்களை இயற்கைக்குப் பலி கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டியது. கடந்த காலங்களிலும் இது தொடர்பான யோசனைகளை இந்தியா தெரிவித்திருந்தது. இதை பாகிஸ்தான் இப்போது பரிசீலிக்க முன்வர வேண்டும். பாகிஸ்தானுடனான நட்புறவில் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டிருந்தபோது கிறிஸ்துமஸ் அன்று லாகூர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு நட்புறவை வலுப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை ஒவ்வொன்றாகத் தொடர வேண்டும். இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் ராணுவ வீரர்கள் இப்படி உயிரிழப்பதை விரும்பவில்லை. அத்துடன் இரு நாடுகளும் தொடர்ந்து போருக்கான தயார் நிலையில் இருப்பதையும் ஆதரிக்கவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த விபத்தையே ஒரு வாய்ப்பாகக் கொண்டு ராணுவ வீரர்களையும் காவல் சாவடிகளையும் சியாச்சின் பனிமலைப் பகுதியிலிருந்து விலக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி ஏற்பட இது முன்னோடியாக இருக்கட்டும்.
———————————————————
(image courtesy: dnaindia.com)