தனது கிராமத்துக்கு நூலகம் பெற்றுத்தந்த சிறுமி
திருச்சியை அடுத்த கொள்ளப்பாடி என்னும் கிராமத்தில் நூலகம் இருந்ததே மக்களுக்கு மறந்து போயிருந்தது. அது மூடியே கிடந்தது. பராமரிப்பு வாசகர் யாரும் இல்லை. தனது கிராமத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் வந்த போது அவரை சந்திக்க அவரது வாகனம் அருகே காத்திருந்து 15 வயது சிறுமி செம்பருத்தி தனது கிராமத்தில் நூலகம் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கும் படி கோரினார். செலவும் நூலகத்துறையின் ஒத்துழைப்பும் தேவைப்படும் அதை நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினருக்கே இரண்டு வருடம் ஆனது. அவர் அந்தச் சிறுமியை வைத்தே நூலகத்தைத் திறந்தது மகிழ்ச்சியளிப்பது. குழந்தைகள் பற்றி கவலை தரும் பல செய்திகள் ஊடகங்களில் வரும் போது இது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருவது.
‘இந்தியன் எக்ஸ்ப்ரஸ்’ செய்திக்கான இணைப்பு ———————————- இது.
(Image courtesy: Indian Express)