தற்கொலையில் இருந்து மண்டியா விவசாயிகளுக்குத் தன்னிறைவு தந்த மதுசந்திரன்
கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்திலும் விவசாயிகள் தற்கொலைகள் நிகந்தவண்ணமே இருந்தன. இதை மாற்ற முடிவு செய்தார் மதுசந்திரன். விவசாயிகள் தம் விளைச்சலில் வந்த காய்கறி தானியங்களை நேரடியாக விற்பது, அந்த விற்பனை நிலையம் அருகில் ஒரு உணவகம் நடத்துவது, நகர்ப்புற மக்கள் நிலத்தை வாடகைக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு எடுத்து, விவசாயம் கற்றுக் கொள்வது போன்ற புதிய வியாபாரத் திட்டங்களை வகுத்தார். விவசாயிகளின் கூட்டுறவு நிறுவனத்தை முறைப்படி அமைத்தார். இன்று விவசாயிகள் கடனில்லாமல் தன்னிறைவு அடைந்திருக்குக்கிறார்கள். இந்த இளைஞர் தம் தகவல் தொழில்நுட்ப வேலையை விட்டு விட்டு இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். நம்பிக்கை தருபவர். விவசாயிகளுக்கு, பிற மாநில மற்றும் பிறபகுதி விவசாயிகளும் இதை உதாரணமாகக் கொள்ளலாம். அரசும் ஊக்குவித்துத் தற்கொலையின் பிடியிலிருந்து விவசாயிகள் அனைவரையும் விடுவிக்கலாம். அவருக்கு நம் வாழ்த்துக்கள்.
இணையத்தில் அவர் பற்றிய கட்டுரைக்கான இணைப்பு இது.
image courtesy social.yourstory.com