இயன்ற வரை
சத்யானந்தன்
நாசூக்காகக் காய்களை
நகர்த்துகிறவர்கள்
இரண்டு மூன்று
நகர்வுகளை யூகிக்க
வல்லவர்கள்
கடிகார முள் சுருதியுடன்
பேதலிக்காத
அலை அசைவுக்
கடல்களானவர்கள்
யாரிடமிருந்தும்
கற்பவை கற்றிடக்
கூடவில்லை
ராட்சத வணிக
வளாக நகர்
படிக்கட்டுகளுள் ஒன்றைத்
தேர்ந்தெடுத்து
காலெடுத்து வைப்பதை
மட்டும்
நகல் செய்ய
இயன்றது
(13.3.2016 திண்ணை இதழில் வெளியானது)
(image courtesy: dreamstime.com)