இரண்டாவது புன்னகை
புத்த பிட்சுவின்
அடியொட்டி நடந்தான்
சாம்ராட் அசோகன்
கால்கள் இழந்த
குதிரையின் காயங்களைக்
குதறிக் கொண்டிருந்தன
கழுகுகள்
வீரன் ஒருவனின்
குழந்தை
தாயின் மடியில்
அயர்ந்து
உறங்கிக் கொண்டிருந்தாள்
மௌரிய சாம்ராஜ்ஜியமென்ன
இனி எந்த நாட்டிலும்
போரென்பதே இருக்காது
நிம்மதிப் பெருமூச்சே
இறுதியாய் முடிந்தான்
அவளின் தந்தை
மந்திரிகள் கலைஞர்கள்
ஜெய கோஷத்துடன்
அணி வகுத்தனர்
அசோகன் பின்னே
புத்தன் இரண்டாம்
முறை
புன்னகைத்தான்
(20.3.2016 திண்ணை இதழில் வெளியானது)
(image courtesy:the-open-mind.com)