சேமிப்பவர் ஏமாளிகளா?- தினமணி கட்டுரை
ஸ்ரீதுரை ஒரு சாதாரண மனிதனின் குரலாக சேமிப்பை ஊக்குவிக்காமல் மாறாக, வட்டிக்கு வருமான வரி மற்றும் குறைவான வட்டி என அரசு முன்னெடுப்பற்றை, தினமணி கட்டுரையில் கேள்விக்குள்ளாக்குகிறார். அமெரிக்காவில் தொடங்கி அடுத் து ஜப்பான் எனப் பல பொருளாதாரங்களில் வங்கியில் வைப்பு வைத்திருக்க உபயோகிப்பாளர் தான் பணம் தர வேண்டும். பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் உயர பணம் முதலீடாக வேண்டும். சேமிப்பாக இருந்து விடக் கூடாது என்பதே அதன் உட்பொருள். உலக மயமாக்கத்தில் ஒரு தனி நாட்டின் பொருளாதாரக் கொள்கை என்ற ஒன்றே கிடையாது. நிறையவே விவாதிக்க விஷயமுண்டு இந்தச் சரட்டில். இந்தியாவில் சேமித் து, அதிகம் கடன் வாங்காமல் வாழும் பாரம்பரியம் உண்டு. அது ஆரோக்கியமானது.
தனிமனிதக் குரலாக ஸ்ரீதுரை பொருளாதாரக் கோட்பாடுகளைத் தொடாமல் எழுதியிருக்கும் கட்டுரை நடுத்தர வர்க்கத்தின் குரல். கட்டுரைக்கான இணைப்பு ———— இது.