விபத்தில் அடிபட்டோரைக் காப்போருக்கு உதவும் கர்நாடக அரசு சட்டம்
விபத் தில் அடிபட்டவர்களைக் கண்டும் காணாதது போலச் செல்வோரில் விரல் விட்டு எண் ணக் கூடியவர்கள் பலர் அது சம்பந்தமாக விசாரணை எனத் தான் அலைக்கழிக்கப்படுவோம் என்று அஞ்சி ஒதுங்குவோரே. அவர்கள் அப்படி ஒதுங்காமல் அவர்கள் தொல் லைப் படுத் தப் படாமல் இருக்க கர்நாடக அரசு ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதன் நன்மைகளைத் தமிழ் ஹிந்து தலையங்கம் இப்படித் தருகிறது:
——————————–
விபத்துகளில் உதவி செய்யப்போய் அநாவசியமான விசாரணைகள், இழுத்தடிப்புகளால் பலர் சங்கடத்துக்குள்ளாகிறார்கள். இதை உணர்ந்த உச்ச நீதிமன்றம், அவர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதையடுத்து, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம், ‘நிலையான செயல்பாட்டு நடைமுறை’(எஸ்.ஓ.பி.) என்ற விதிகளை வகுத்தது. பிறகு 2016 ஜனவரியில் அதை அறிவிக்கையாகவே வெளியிட்டது.
விபத்து நடைபெறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பவர் காயம்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றால், அவரை சிவில் அல்லது குற்றவியல் சட்டப்படியான விசாரணைகளுக்கு உட்படுத்தக் கூடாது, அந்த விபத்து வழக்கில் அவரைச் சாட்சியாக்கக் கூடாது என்று அந்த விதிமுறையில் கூறப்பட்டது. அவராக விரும்பி சாட்சி கூற விரும்பினால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியது. அப்படி அவர் முன்வந்தாலும் அவரிடம் ஒரு முறை மட்டுமே சாட்சியம் பெற வேண்டும். அவரை மிரட்டியோ அலைக்கழித்தோ சாட்சியம் கூற வற்புறுத்தக் கூடாது என்றும் கூறியது. இதன் தொடர்ச்சியாகத்தான், இந்நடவடிக்கையை கர்நாடக அரசு எடுத்திருக்கிறது.
————————————–
இது போன்ற சட்டம் எல்லா மாநிலங்களிலும் இயற்றப் பட வேண்டும். அப்போது தான் விபத் தைப் பார்க்கும் யாருமே உதவி செய்ய முன் வருவார்கள். வரவேற்கப்பட வேண்டியது. தமிழ் நாட்டிலும் வர வேண்டியது.
தமிழ் ஹிந்து தலையங்கத்துக்கான இணைப்பு —————- இது.
(image courtesy: photobucket.com)