போத்தீஸ் நிறுவனத்தின் பசுமைத் திட்டம்
போத்தீஸ் நிறுவனம் இலவசமாக மரக்கன்றுகள் தருகிறது இது வரை 50 லட்சம் கன்றுகளை அப்படி வாடிக்கையாளருக்குக் கொடுத்தது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். வாடிக்கையாளருக்கு பிளாஸ்டிக் பையை நிறையவே இலவசமாகத் தருபவை துணிக்கடைகள். அவை மாசு படுத்துபவை. மாறாக மரக்கன்று கொடுப்பது வியாபார யுக்தியானாலும் உருப்படியான ஒன்று. மாசுக்கட்டுப்பாடு, வெப்பம் தணித்தல், பூமிக்கு உறுதி தருதல், ஆக்ஸிஜன் பெருக்குதல், நிழல், மழைக்கான மேகம் தருதல், பறவைகளுக்குப் புகலிடம் என மரத்தின் பயன் களுக்கு அளவே இல்லை. இன்று ஒவ்வொருவரின் கடமையே மரம் நடுவது தான் என்று கூடக் கூறிவிடலாம். இந்த நிறுவனத்தின் இந்தத் திட்டம் மிகவும் பாராட்டுக்கு உரியது. போட்டியாக எல்லா நிறுவனங்களும் கொடுத்தால் தமிழ் நாட்டுக்குப் பொற்காலம் தான். பாராட்டுக்கள்.
(image courtesy: youtube)