“விண்மீன்கள்” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு


Vinmeengal

“விண்மீன்கள்” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு

2012ல் வெளிவந்த ‘விண்மீன்கள்’ திரைப்படத்தை தொலைக்காட்சியில் தாமதமாகப் பார்க்க முடிந்தது.
பிறப்பிலேயே மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ‘ஸ்பாஸ்டிக்’ என அழைக்கப்படும் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். அவர்களது மூளையின் திறன் கள் அதாவது கற்றல் புரிந்து கொள்ளுதல் உணர்ச்சி வெளிப்பாடுகள் பிறரைப் போலவே தான். ஆனால் நரம்பும் மூளையும் இணைந்து உடல் உறுப்புக்களை ஒருங்கிணைத்து வேலை செய்ய வைப்பது மற்றவருக்கு இயல்பானது ஆனால் அவர்களுக்கு அது கிடையாது. பிறரது உதவியை மட்டுமே நம்பி அவர்கள் வாழ்க்கை நடத்த வேண்டி வருகிறது.

இப்படி ஒரு குழந்தையைப் (மகனை) பெற்றெடுத்த தாய்தந்தை முன் தானே வளர்ப்பதா அல்லது சிறப்புப் பள்ளிஉள்ள பாதுகாப்பகத்தில் விட்டு விடுவதா என்னும் கேள்வி எழுகிறது. இருவரும் தாமே வளர்க்கிறார்கள். இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளாமல் முழுவதும் அந்தக் குழந்தையையே கவனிக்கிறார்கள். சாதாரணமான குழந்தைகள் படிக்கும் பள்ளியில் போராடிச் சேர்க்கிறார்கள். அவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட சக்கர நாற்காலியைத் தான் தள்ளியபடி பள்ளியின் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறார் அவனது தந்தை. அது மிகப்பெரிய மனோரீதியான பலத்தை அவனுக்குத் தருகிறது. அவனை மேலும் ஊக்குவிக்க தனது இதய நோயைத் தாண்டி அந்த அப்பா ‘மேரதான்’ எனப்படும் நீள் ஓட்டத்திலும் சக்கர நாற்காலியைத் தள்ளியபடி கலந்து கொள்கிறார். அவன் வளர்ந்து வாலிபனாகிறான். ஒரு பள்ளியில் ஆசிரியராக சிறப்பாகப் பணி புரிகிறான். பின்னாளில் நல்லாசிரியர் விருதும் பெறுகிறான். அவனை தூரத்து உறவினர் கூடவே இருந்து அவன் தாய் தந்தையரை விட்டு மலைப்பிரதேசத்தில் பணிபுரியும் போது கண்ணின் இமையாகக் கவனித்துக் கொள்கிறார். அந்தப் பெரியவர் அவனுடன் நட்பு ரீதியாகப் பழகும் (விவாகர்த்தான) இளம் பெண் விஷயத்தில் எச்சரிக்கிறார். கருணை காதலாகாது என விளக்குகிறார். அதை ஏற்க மறுக்கும் அவன் அவளை நேரடியாகக் கேட்கும் போது அவள் மரியாதை இரக்கம் இரண்டு மட்டுமே உள்ளன காதல் இல்லை என நேர்மையாக பதிலளிக்கிறாள். ஆனால் அவன் மனமுடைந்து பரிதவிப்பதைக் கண்டு மனம் மாறுகிறாள். அவள் தன் தந்தைக்கு அவனை மணக்க இருக்கும் முடிவைத் தெரிவிக்க அவர் அவனைச் சாடுகிறார். எந்தத் தகப்பனுக்கும் இது ஏற்புடையாதாகாது என விளக்குகிறார். அது அவனிடம் ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உடல் மற்றும் மனோரீதியாக யாரையும் சாராமல் வாழ முடிவெடுக்கிறான். அந்தப் பெண் தன் தகப்பனை உதறி அவனை மணக்க முன் வரும்போது, அந்த இளைஞனால் அதை ஏற்கவே முடியவில்லை. அப்பா என்பது மிகவும் உயர்ந்த ஸ்தானம். அவரை உதற நீ எந்த அடிப்படையிலும் நினைக்கவே கூடாது என்று அறிவுறுத்தி அவளைப் பிரிகிறான். தன் பெற்றோருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்து அந்த ஊரையே விட்டு வெளியேறிவன் இயற்கையான மரணத்தை சிறுவயதிலேயே அடைந்து விடுகிறான்.

இந்தப் படத்தின் முற்பாதியில் பெற்றோர் மகன் பாசப்பிணைப்பும் ‘ஸ்பாஸ்டிக்’ பாதித்த குழந்தைகள் எதிர் கொள்ளும் சவாலும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பிற்பகுதி ‘கருணையும் காதலும் ஒன்றல்ல’ என்னும் கருத்தை வலியுறுத்தி நகர்கிறது. ஜெயகாந்தன் ‘கருணையினால் அல்ல’ என்னும் நாவல் பின்னாளில் ‘கருணை உள்ளம்’ என்னும் திரைப்படமாக வெளி வந்தது. அதன் மையக் கருவே காதல் எது கருணை எது என்பதே.

இந்தத் திரைப்படம் அஞ்சலி போலவே மாற்றுத் திறனாளிகளை மையப்படுத்தினாலும் அவர்களது உலகைப்பற்றிய தரிசனம் நமக்குத் தராத படமே.. அதாவது அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்களது இயல்பான பலம் மற்றும் குறை இவற்றை நாம் புரிந்து கொள்ள உதவாததே. ஆனால் மனித உறவுகள் பற்றிய விவாதம் சித்தரிக்கபட்டுள்ள விதம் தமிழ்படங்களில் காணக் கிடைக்காதது.

‘ஸ்பாஸ்டிக்’ குறைபாடுள்ள மாற்றுத் திறனாளியாக நடித்துள்ள இளைஞர் ராகுல் ரவீந்திரன் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். தந்தையாக வரும் விஷ்வாஸ் நடிப்பு இன்னும் இயல்பாக இருந்திருக்கலாம். ஆனால் கனமான பாத்திரம் என்பதைப் புரிந்து கொண்டு நடித்திருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் மேனனுக்கு தாமதமாக என் பாராட்டுக்கள்.

(image courtesy: wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s