அழுகும் கழகங்கள் – சமஸ் கட்டுரை
தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த சமஸ் கட்டுரைக்கான இணைப்பு ——————- இது.
தலைப்பு சற்றே அதிரிச்சி தருவது. கருத்துச் சித்திரம், இன்று 23.4.2016 வெளியான இந்தக் கட்டுரையுடன் வந்ததில்லை. அதற்கு முன்பாகவே தமிழ் ஹிந்து நாளிதழில் வெளி வந்தது. அந்தச் சித்திரமும் இந்தக் கட்டுரையின் மையக் கருத்துடன் பொருந்துவது. தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இரண்டு பெரிய கட்சிகளில் அடிப்படைத் தொண்டர்களுக்கும் தலைமைக்கும் நடுவே இடைத்தரகர்களாக சிலர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கட்சிகள் இவர்களைத் தாண்டி மக்கள் உணர்வை அவர்களுடன் உண்மையிலேயே தொடர்புள்ள நல்ல தொண்டர் தரப்பைப் புரிந்து கொள்ளும் வழி ஏதுமில்லாமல் அழுகுகின்றன எனச் சாடுகிறார். கட்டுரையின் முத்தாய்ப்பான பகுதி இது:
_______________________________________
உண்மையில் கட்சி யார் கையில் இருக்கிறது? இரு கட்சிகளுக்குமே இந்தக் கேள்வி பொருந்தும். தாம் தகுதிக்குரிய நடத்தையோடு இல்லாததால் கீழே தார்மிகரீதியாகக் கேள்வி கேட்கும் உரிமையை இழந்து நிற்கின்றன தலைமைகள். கட்சியின் பழைய வரலாற்று நினைவுகளாலும் தலைவர்கள் மீதான கண்மூடித்தனமான அன்பாலும் கீழே உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள் தொண்டர்கள். நடுவில் தரகு வேலையில் தேர்ந்தவர்களே கொழிக்கிறார்கள். நிழல் அதிகார மையங்களே ஆள்கின்றன.
மக்களும் தொண்டர்களும் நெருங்க முடியாத உயரத் தில் கட்சித் தலைமைகள் நிற்பதால், நிழல் அதிகார மையங்களையும் இடைத்தரகர்களையும் தாண்டி அவற் றால், உண்மையான தொண்டர்களை அடையாளம் காண முடியவில்லை. நிழல்களின் தவறுகள் அம்பலமாகும்போது, கட்சித் தலைமைகளால் ‘அடி – அழு’ பாவனைகளைத் தாண்டி ஒன்றும் முடியவில்லை.
——————————————————-
கொள்கைகளின் அடிப்படையில் இரண்டு கட்சிகளும் நிற்கவில்லை. தனிநபர் வழிபாட்டின் மீது தான். அதுவே அழுகுவதற்குக் காரணம்.
(cartoon courtesy: tamil.the hindu.com)