குழந்தைகள் புத்தகம் வாசிப்பதன் அவசியம் – தினமணி கட்டுரை
‘உலக புத்தக தினத்தை ஒட்டி தினமணியில் விமலா அண்ணாதுரை எழுதியுள்ள கட்டுரையில் குழந்தைகள் புத்தகம் வாசிப்பதன் அவசியத் தை வலியுறுத்துகிறார். பெரியவர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்கள் வயதுக்கேற்ற புத்தகங்களை வாசித்து அதை ஒரு பழக்கமாக ஆக்க வேண்டும். குடும்பத் தில் ஒரே குழந்தை இருக்கும் கால கட்டம் இது. குடியிருப்புப் பகுதியில் பல குழந்தைகளை ஒன்றாக வைத்து வாரம் ஒரு முறை வாசிக்க வைக்கலாம். நல்ல கதைகளை எளிமையாக நடிக்கச் சொல்லி அந்த ஒரு மணி நேரத்தை உற்சாகம் மிகுந்ததாக்கலாம். பசுமரத்து ஆணி போல புத்தகங்களின் மகத்துவம், வாசிப்பின் பயன் அவர்கள் மனத்தில் பதியும். நூலகங்ளுக்குப் போய் புத்தகம் எடுத்துப் படிப்பதை அவர்கள் வளர வளர உருவாக்க வேண்டும்.
கட்டுரைக்கான இணைப்பு —————– இது.
(image courtesy:shutterstock.com)