வாழ்க்கைத் தரமும் மனிதனின் தரமும் ஒன்றா?- தினமணி கட்டுரை
தரமான வாழ்க்கை பற்றி நிறைய கவனம் இருக்கிறது. தரமான மனிதர்கள் ஏன் அருகி வருகிறார்கள்? சிந்தனைக்குரிய கட்டுரையில் தினமணியில் இரா.கதிரவன் கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறார்:
———————————–
வாழ்க்கைத் தரம் என்பது வேறு, மனிதனின் தரம் என்பது வேறு.
வாழ்க்கைத் தரத்தினை செல்வம் நிச்சயிக்கலாம். ஆனால், மனிதனின் தரத்தை அவன் கடைப்பிடிக்கும் நன்னெறிகளே நிச்சயிக்கின்றன. நன்னெறிகள் அவற்றைக் கடைபிடிக்கும் மனிதனை உயர்த்துகின்றன. ஆனால், அதனினும் மேலாக அவன் சார்ந்த மக்களையும் – சமுதாயம் – நாடு ஆகியவற்றையும் உயர்த்தவல்லது.
அதற்கு நேரெதிராக, ஒருசிலர் நெறி பிறழ்ந்து தம் வாழ்க்கைத் தரத்தை மட்டும் உயர்த்திக் கொள்ளும்போது, அவர்கள் அதனால் பலன் பெறுவதுபோல் தோன்றினாலும், அவர்களைச் சார்ந்த சமுதாயம் – அல்லது நாடு பலன் பெறுவதில்லை. நன்னெறி பிறழ்ந்து – தவறுகளை அரசனே இழைக்கும்போது, அந்த நாடு மீள முடியாத வீழ்ச்சியடைகிறது. இதற்கான சான்றுகளை சரித்திரம் அடுக்குகின்றது.
———————————————————
கட்டுரைக்கான இணைப்பு ——————– இது.