இந்திய சூரிய மின்சாரத்தில் அமெரிக்கா தலையீடு- தினமணி தலையங்கம்
உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசு குறித்த உலகளாவிய விழிப்புணர்வு முன் எப்போதையும் விட நம்பிக்கை தருவதாயிருக்கிறது. அதே சமயம் முக்கியமான ஒரு கேள்வியை வளரும் நாடுகள் எழுப்பி வருகின்றன. மாற்று எரிசக்திக்கான தொழில் நுட்பம் எந்த ஷரத்துக்களில் மற்றும் விலையில் தரப்படுகிறது என்னும் கேள்வியே அது. தனது நாட்டு வணிக நோக்கங்களை இதில் முன்னிறுத்தியே வளர்ந்த நாடுகள் தாம் உலக நன்மைக்காக உழைப்பவர்கள் போல நாடகம் ஆடுகிறார்கள். இந்தியாவில் மாற்று எரிசக்திக்கான பணிகளை இந்தியாவுக்குள்ளேயே செய்ய உலகமயமாக்கத்தைக் காட்டி அமெரிக்க தடைக் கற்களை இடுகிறது என்பதை சுட்டிக்காட்டும் தினமணி தலையங்கம் உலகமயமாக்கத்தில் வளர்ந்த நாடுகள் கை ஓங்கி இருப்பதைச் சுட்டிக் காடுகிறது.
தலையங்கத்துக்கான இணைப்பு —————- இது.
(image courtesy: wiki)