அண்ணா ஆட்சிக் காலத்தில் தொடங்கி ஓயா இலவசங்கள் – தினமணி தலையங்கம்
தினமணி தலையங்கத்தில் ‘ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி’ என்று அண்ணா துவங்கி வைத்ததே இலவசம் என்னும் கோணத்துடன் தலையங்கம் வந்திருக்கிறது. வளர்ச்சியா இலவசமா என்னும் தேர்வை மக்கள் இன்னும் சிந்தனைக்கே எடுத்துக் கொள்ளவில்லை. ஆட்சியைப் பிடிக்கும் அவசரம் ஏன் இந்த இரண்டு கட்சிகளுக்கும் என்னும் கேள்வியை இவர்கள் மனத்தில் எழுப்பிக் கொள்ளவே இல்லை. தமிழ் நாட்டில் ஆரோக்கியமான விவாதங்கள் நடப்பதே இல்லை. தொலைகாட்சிகளில் பங்கேற்போர் சகிப்புத்தன்மை இன்றிக் கத்துவது இந்த மாநிலத்தில் என்ன சுயசிந்தனை வேண்டிக் கிடக்கிறது என்னும் ஆத்திரத்தில் தான். நம் மீது வரிச்சுமை வைத்து வரும் வருவாயில் என்னென்ன செய்யலாம் என ஒரு தெளிவு மக்களுக்கு ஏற்படாத வரை இலவசங்களின் அரசியல் ஓயாது.
தினமணி தலையங்கத்துக்கான இணைப்பு —————– இது.