ப்ராய்ட் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை
ப்ராய்ட் உளவியலில் முன்னெடுத்த ஆராய்ச்சிக் கோணம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவரது அணுகுமுறையால் மட்டுமே நாம் குழந்தைப்பருவத்தில் பதியும் நம்பிக்கைகள், வன்முறைகளால் ஏற்படும் தாக்கங்கள் எப்படி வாழ்நாள் முழுதும் மனோபாவத்தை பாதிக்கின்றன என்றறிகிறோம். கீழை நாட்டுப் பண்பாட்டை உள்ளடக்கியது அல்ல அவரது அணுகுமுறை. இருந்தாலும் விஞ்ஞான பூர்வமான அடிப்படை அணுகுமுறையை மனோதத்துவத்தைப் பயிலும் யாருமே அவர் காட்டிய திசையைத் தவிர்த்து மேற்கொள்ளவே முடியாது. அவரைப் பற்றிய மருத்துவர் தம்பிராஜா தமிழ் ஹிந்துவில் எழுதியுள்ள கட்டுரைக்கான இணைப்பு இது.