ஓட்டுப் போடுவதே பெரிய சாதனை
ஒரு ஓட்டு என்பது பெரிய மாற்றம் தந்த புள்ளி விவரங்களைத் தந்து சமஸ் எழுதிய கட்டுரையை தமிழ் ஹிந்து நாளிதழில் வாசித்து விட்டு குடும்பத்துடன் எங்கள் சாவடிக்குப் போனேன். அது தான் எங்கள் புதிய வாக்குச் சாவடி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எங்கள் பெயரை நாங்களே தேட வேண்டும். ‘பூத் ஸ்லிப்’ அரசும் தரவில்லை. கட்சிகளும் தரவில்லை. புது வீட்டுக்கு வந்த பின் முகவரி மாற்றம் மட்டும் அந்த முகவரி உள்ள அடையாள அட்டை வாங்க நான் பத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் எடுத்தேன். இறுதியில் தேடித் தேடிக் கிடைக்காததால் எங்கள் வாக்குச் சாவடி அதிகாரியிடம் கேட்டால் அவர் வேறு பள்ளிக்கூடம் என்றார் சரி பார்க்காமலேயே. ஆனால் முகவரி மாறும் போது இதே பள்ளியில் பட்டியல் தேடி வந்த அனுபவம் எனக்கு இருந்ததால் மீண்டும் தேட என் மனைவி பெயரை ஒரு வழியாக அவர் கண்டுபிடிக்க அவர் முதலில் ஓட்டளித்தார். அதே அறையில் நான் முறையிட்டேன். பெயர் வாரியான பட்டியலில் தேட அங்கே இருந்த அலுவலருக்கு விருப்பமில்லை. மீண்டும் வெளியில் வந்து நூற்றுக்கணக்கான பக்கங்களில் தேடி அலுத்தேன். வெறுத்துப் போய் திரும்ப நினைத்த போது என் மனைவி அதே அறைக்குச் சென்று வேண்டுகோள் விடுக்க ஒரு வழியாக என் பெயர் கிடைத்தது. அதற்கு அடுத்தது என் மகன் பெயர் எனக்கு நினைவு. அது சரியாக அமைய ஒரு வழியாக ஒரு மணி நேரம் போராடி ஓட்டுப் போட்டேன். போட்டோம். பெரிய சாதனை இது. விருப்பமில்லாத அரசு ஊழியர்களை பணிக்கு அழைப்பது முக்கிய ஓட்டை. அவர்களை நிர்வகிக்க அங்கே யாருமில்லை.
வீட்டுக்கு வந்தால் புதிய தலைமுறையில் எவ்வளவு அதிக சதவிகிதம் ஓட்டு நடக்கிறதோ அந்த அளவு ஜனநாயகம் வெல்கிறது என்னும் கருத்தை திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள். உண்மைதான். நாம் போராடி ஓட்டுப் போடும் அளவு நம் கடமை ஜனநாயகம் தழைப்பதில் பங்களிப்பதாக அமைகிறது. போராடி ஓட்டுப் போடுவோம். என்றைக்காவது நம் அமைப்பு உருப்படும் என்று நம்புவோம்.
சமஸ் கட்டுரைக்கான இணைப்பு ———-இது.
(indiaevm.org)