இருகட்சிகளில் யார் வந்தாலும் எது கூடாது – தினமணி கட்டுரை
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி என் முருகன் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவு படுத் துகிறார். ஆட்சியில் இருப்போர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. அரசு இயந்திரம் இயங்க சில சட்டதிட்டங்கள் மற்றும் மக்கள் புகார்களைக் களைய வழிமுறைகள் கட்டாயம் உள்ளன. இவை சரியாக இயங்குகின்றனவா என்பதை நிர்வாகத் தலைமையிலுள் ள முதலமைச்சர் கண்காணிக்கிறார். இதை வலுப்படுத்த, தொய்வைக் களைய மக்கள் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டலாம். காட்ட வேண்டும். ஆனால் இதற்கு மாற்றான அதிகார மையமாகத் தான் செயற்படுவேன் என்பது நிர்வாகத் தலையீடாக இருக்கும். வேறு பயன் ஏதுமில்லை. நிர்வாகம் என்பது தொடர்ச்சி உள்ளது. அதிகாரிகள் மாறினாலும் சட்ட திட்டங்கள் விதிமுறைகள் தொடர்ச்சியை வழங்குகின்றன. ஊழல் மற்றும் அலுவலர் மெத்தனம் அல்லது வரம்புமீறலை சுட்டிக் காட்ட வேண்டும் மக்கள் பிரதிநிதி. மாறாகத் தான் தலையிட்டு ஒவ்வொன்றையும் செய்ய வைப்பேன் என்பது நடைமுறை சாத்தியமற்றது. நிர்வாகத்தை சீர்குலைப்பது. ஆனால் இது கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலேயே இடம் பெறுவது கவலை தருவது என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.
கட்டுரைக்கான இணைப்பு ————- இது.
(image courtesy:you tube)