ஓட்டுப்போடத் தந்த பணத்தை நிராகரித்த நரிக்குறவர்கள்
பல விவாதங்களில் “பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை மட்டும் கண்டிக்கக் கூடாது. பணம் வாங்கும் வாக்காளர்கள் கடுமையான கண்டனத்துக்குரியவர்கள்” என்னும் கருத்தை வலியுறுத்திய பலரை நாம் காண்கிறோம். உண்மையில் வாங்கிக் கொண்டு விலை போகிறவர்கள் இந்த முறைகேட்டுக்குத் துணை போய் ஜனநாயகத் தைக் கேலிக் கூத்தாக்குபவர்கள். இவர்களில் எல்லா ஜாதி மத மக்களும் உண்டு. பேதமெல்லாம் மறையும் இங்கே. நரிக்குறவர்கள் வள்ளியூரில் பணத்தை மறுத்து தமக்கு அது நன்மை செய்யாது என்பதில் தெளிவாக இருந்து வாக்களித்தார்கள் என்று தமிழ் ஹிந்து நாளிதழில் படித்தேன். மிகவும் நம்பிக்கை தரும் செய்தி இது. அவர்களை விட அந்தஸ்தும் வாய்ப்பு வசதியும் உள்ள பலரும் விலை போகிறார்கள். இவர்களைப் பார்த்து சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் அப்படிப் பட்டவர்கள்.
தமிழ் ஹிந்து நாளிதழ் செய்திக்கான இணைப்பு ———- இது.
(image courtesy: tamil.the hindu.com)
கொள்கை மாறாமல் ;காசுக்காக (தன்) மானத்தை விற்காத பூர்வீக குடிகள் உணர்த்தும் பாடம் பாராட்டுக்குரியது. நோபிள் நினைவு பள்ளி வாக்கு சாவடியில் வாக்கு பதிவு செய்ய வரிசையில் நிற்கும் இவர்களுக்கு நோபிள் பரிசு (வரிசையில் நிற்கும்) – தரவேண்டும்.
கோ