வழக்கறிஞர்கள் நடத்தையை நெறிப்படுத் தும் சட்டம் காலத்தின் கட்டாயம் – நீதிபதி சந்துரு
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தகாத முறையில் நடந்து கொண்டால் அவர்கள் உரிமம் பறிக்கப்படுவது உட்பட பல கடுமையான நடவடிக்கைகளை புதிய சட்டம் உறுதி செய்கிறது. தமிழ் ஹிந்து நாளிதழில் நீதிபதி சந்துரு இது காலத் தின் கட்டாயம் என எழுதும் போது முத் தாய்ப்பாக இப்படிக் குறிப்பிடுகிறார்:
——————————————
நீதிமன்றத்திற்குள் ஊர்வலமும், முழக்கங்களும், வழக்காடுபவர்கள் தாக்கப்படுவதும், நீதிபதிகளின் சாதியைக் கூறி வழக்கு மாற்றம் கேட்பதும் இன்னும் எத்தனையோ பட்டியலிட முடியாத அசிங்கங்கள் அரங்கேறுகின்றன. சென்னை நீதிமன்றத்தில், ஒரு அரசியல் தலைவர் மீது முட்டை வீசப்பட்டதும், அவர் முகத்தில் தாக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். அதற்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி போடப்பட்ட உத்தரவு ஏழு வருடங்களாக இன்னும் வழக்குக் கோப்புகளில்தான் உறங்குகிறது.
இந்திய நீதிமன்றங்கள் சவாலை எதிர்கொள்ள நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப 40,000 நீதிபதிகளை நியமிக்க அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார் நம்முடைய தலைமை நீதிபதி. உண்மையில் இந்தியா முழுவதுமுள்ள மூன்று லட்சம் வழக்கறிஞர்களைச் சமாளிக்க போதுமான நீதிபதிகள் இல்லை என்பதே நாம் எதிர்கொள்ளும் சவால். கிராமப் பகுதிகளில் தன்னந்தனியாக நீதிமன்றத்தில் பணியாற்றும் இளம் பெண் நீதிபதிகள் முன்வைக்கும் குறைகளைத் தீர்ப்பதற்கே எவ்விதச் செயல்திட்டமும் இல்லாத இச்சூழலில், இப்படியான விதிமுறைகள் காலத்தின் கட்டாயமாகவே தோன்றுகிறது. நியாயமாக வழக்கு பேசும் வழக்கறிஞர்கள் இதுபற்றியெல்லாம் கவலையே கொள்ள வேண்டியது இல்லை. அதை விடுத்து, வேறு வழி செல்வது என்று முடிவெடுப்போரை நீதிதேவி மட்டும் அல்ல; மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
—————————————————–
கட்டுரைக்கான இணைப்பு ————————- இது.
(image courtesy: youtube)