தகவல் உரிமை உணர்வாளர் பாரஸ்மல் கொலை- தினமணி கண்டனம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல முறைகேடுகள், அலட்சியப் போக்குகளை வெளிச்சத்துக் கொண்டு வந்து அரசின் பல துறைகளை நெறிப்படுத் த முயன்றவர்கள் பலர். பாரஸ்மல் அப்படிப்பட்ட ஒரு உணர்வாளர். அவர் பட்டப் பகலில் படுகொலை செய்யப் பட்டது தனிமனிதனுக்கு அல் ல ஒரு அமைப்புக்கும் சமூகத்துக்கும் விடப்பட்ட சவால். இந்தியாவில் பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர், பகுத்தறிவாளர்கள் கொலை செய்யப்படுவது சகஜமாகி வருவது மிகவும் அவமானத் துக்குரியது. நிலைமையைக் கீழ்க் கண்டவாரு தினமணி எடுத் துரைக்கிறது:
————————————–
சமூக விரோதிகளையும் ஆட்சியாளர்களின் அதிகாரிகளின் தவறுகளையும் வெளிச்சம்போடும் இடித்துரைப்பாளர்கள் 166 பேர் கடந்த ஆறு ஆண்டுகளில் தாக்கப்பட்டு, நெருக்கடி தரப்பட்டு, கடத்தப்பட்டு, சமூக விரோதிகளால் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இவர்களில் 27 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
“எல்லைகள் நீத்த எழுத்தாளர்கள்’ என்கிற சர்வதேச அமைப்பு 2015-இல் நடத்திய ஆய்வின் முடிவுப்படி, ஆசியாவிலேயே பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடு இந்தியா என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும்கூட நம்மைவிட அதிகமான பாதுகாப்பு பத்திரிகையாளர்களுக்குத் தரப்படுகிறது என்கிற அந்த ஆய்வு கடந்த ஓராண்டில் மட்டும் ஒன்பது பத்திரிகையாளர்கள், தவறுகளை வெளிச்சம்போட்டுக் காட்டியதற்காக இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவலைத் தருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் 84 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
——————————————————-
சமூக ஊடகங்கள் உட்பட்ட எல்லா ஊடகங்களிலும் இந்த வன்முறையும் உரிமை மறுக்கும் அடாவடித் தனமும் கண்டிக்கப்பட வேண்டும். கண்டிப்பாக அந்த எதிர்ப்பு சமூக விரோதிகளுக்கு எச்சரிக்கையாக மாறி நிலைமை மேம்பட வழிவகுக்கும்.
தினமணி தலையங்கத்துக்கான இணைப்பு———— இது.
(image courtesy:newminute.com)