விண்வெளித் தொழில் நுட்பத்தில் இந்தியாவின் வியத்தகு சாதனை
நாம் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ளும் விதத்தில் ஒரே சமயத் தில் 20 செயற்கைக் கோட்களை இஸ்ரோ பிஎஸ் எல் வி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ரஷ்யா 33, அமெரிக்கா 29 என அதிக அளவில் அனுப்பிய சாதனையாளர்களாக இருந்தாலும் நாம் மூன்றாவதாக வந்திருப்பது எளிய சாதனை அல்ல. அமரர் அப்துல் கலாம் மற்றும் பல விஞ்ஞானிகளின் மூளையும் அயரா உழைப்புமே இந்தத் தொழில் நுட்பத்தை நாமே உருவாக்கக் காரணம். இது வணிகரீதியாக நமக்கு வருவாயுமளிக்கிறது. நம்மை உலகம் தலை நிமிர்ந்து பார்க்க வியக்க வைக்கும் சாதனை இந்த 20 செயற்கைக் கோள் ஏவிய அபார வளர்ச்சி. இஸ்ரோவின் எல்லா விஞ்ஞானிகளும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.
இது பற்றி விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரைக்கான இணைப்பு ———– இது.