தமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கியத் தொடர்


sra6-300x242

தமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் இலக்கியத் தொடர்

பழங்குடிக் கதைகள், நாடோடிக் கதைகளை நம்முடன் பகிரும் விதமாக எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் ஹிந்து நாளிதழில் ‘கடவுளின் நாக்கு’ என்னும் தொடரை எழுதுகிறார். இன்று முதல் பகுதி வந்தது. அதற்கான இணைப்பு ———–இது.

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி கதை சொல்லிய காலம் போய் அவர்கள் தொலைக்காட்சி முன் குழந்தைகளை விட்டுவிடுகிறார்கள் என்பதாக ஒரு இடத்தில் குறிப்பிட்டு எஸ்.ரா ஒரு பரிந்துரை செய்கிறார்:
———————————————
குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும்போது அம்மா கதைகளையும் சேர்த்து ஊட்டுவார். குழந்தை இன்னொரு வாய் அதிகம் சாப்பிட வேண்டும் என்றால், அரக்கனின் உயிர் அடுத்த கடல் தாண்டிக் கிளியாகப் பறந்து போய்விடும். இன்றோ, சாப்பாட்டைத் தட்டில் போட்டு, குழந்தையை டி.வி முன்னால் உட்கார வைத்துவிடுகிறார்கள். தனது உணவோடு தொலைக்காட்சிப் பிம்பங்களையும் குழந்தைகள் அள்ளியள்ளி விழுங்குகின்றன.

ஆகவே, வன்முறைக் காட்சிகள் அதன் மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றன. இதிலிருந்து விடுபடுவதற்கு குழந்தை களுக்கு நாம் கதைகள் சொல்லவும், அதற்காக நாம் கதை படிக்கவும் தொடங்க வேண்டும். கதை சொல்வதை கல்வி நிலையங்கள் பாடமாக வைக்க வேண்டும். மாணவர்கள் ஒன்றுகூடி கதைப் பேசுவதை வாரம் ஒருமுறை பள்ளியே நிகழ்த்தலாம்.
———————————————

நாம் படிக்கத் துவங்க வேண்டும் என்று அவர் கூறும் போது சமீபத்தில் மூத்த குடிமக்கள் நால்வருடன் நான் செய்த பயணம் நினைவுக்கு வருகிறது. காத்திருக்கும் படி ஆன ஒரு இடத்தில் எல்லோருமே சும்மாதான் இருந்தோம். தினமணி ஞாயிறுப் பதிவு எனக்குப் படிக்கக் கிடைத்தது. கதிரை பாட்டி ஒருவரிடம் நீட்டினேன். அவர் அதைக் கையில் வாங்கவே இல்லை. அதற்கு சற்று முன் தான் நான் கு வயதுப் பேரனை ஒவ்வொருவரிடமும் “கபாலிடா” என்று ஒரு வசனம் அதைச் சொல்லச் சொல்லி அதற்கு சரியான உடல் மொழி அவன் செய்கிறானா என்று கவனித்து வியந்து போனார். எனவே இரண்டாவது வாக்கியத்தில் எஸ்.ரா சொல்வது நடைமுறை சாத்தியமானது. பள்ளிகளின் வழி குழந்தைகள் கதைப் புத்தகம் படிப்பதற்கு ஒரு நல்ல துவக்கம் நிகழ வாய்ப்புள்ளது. வாசிப்பு இல்லாதோரது இழப்பு என்னது என்பது பற்றி ஆயிரம் பக்கமே எழுதலாம். இலக்கியத்தில் அத்தனை இருக்கிறது. வாசிப்புக்குப் பின் நம்முள் நிகழும் தொடர் சிந்தனை வாழ்க்கை மற்றும் மானுடம் பற்றிய மேம்பட்ட புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்வது.

(image courtesy:sramakrishnan.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s