ரயில் நிலையக் கொலையில் ஊடக அத்துமீறல்கள் – தினமணி
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மக்கள் எதிரே நடத்தப் பட்ட கொலை தமிழகத்தின் மக்களை பேரதிர்ச்சிக்கும் அவமானத்துக்கும் உள் ளாக்கியது. நீதிமன்றம் தாமே அதை விசாரணைக்குள்ளாக்கி ஒரு எச்சரிக்கையை விடுத்தது. காவல்துறை தமது பணியை முடிக்கும் முன் ஊடகங்கள் பல நிலைகளில் அந்த விசாரணையின் தகவல்களை வெளியிட்டனர். பரபரப்புவழி வணிகம் என்பதே அவர் நோக்கம். பரிதாபமாக, உதவ யாருமின்றி கொலையுண்டவரின் குடும்ப விவரங்களையெல்லாம் ஊடகங்கள் வெளியிட்டன. ஊடகங்கள் தாமே தமது வரையறைகளை வகுத்து ஒரு ஊடக தர்மத்தைப் பேண வேண்டும். தினமணி வன்மையாக இந்த அத்துமீறல்களைக் கண்டித்துள்ளது மிகவும் பாராட்டத் தகுந்தது. நமது ஊடகங்கள் நம்மைப் பற்றிய -நமது ஆர்வத்தை பற்றிய – மிக மோசமான பிம்பத்தைத் தருகிறார்கள் என்பது கவனிக்க வேண்டியது.
தினமணி தலையங்கத் துக்கான இணைப்பு ———- இது.
(image courtesy:123rf.com)