அஞ்சலி – வே.சபாநாயகம்
வே.சபாநாயகம் மூத்த எழுத்தாளர். ஜெயகாந்தனின் சமகாலத்தவரும் நண்பருமான அவர் தீவிரமாகத் தமிழ்த் தளத்தில் இயங்கியவர். என்னுடைய ஆசான் எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கடலூரில் வைத்து பெரியவர் சபாநாயகத்தை சந்தித்தேன். நேரிலும் மற்றும் ராமச்சந்திரன் மூலமாகவும் என் படைப்புக்களைப் பாராட்டி என்னை ஊக்குவித்தவர். ஆரம்ப காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு அங்கீகாரமும் பல காத தூரம் செல்லும் உற்சாகத்தை ஒரு படைப்பாளிக்கு வழங்குகிறது. 4.7.2016 அன்று அவர் மறைவு கேட்டு மிகவும் வருந்தினேன். அவர் பற்றிய நினைவுகள் வந்தன. உடனடியாக அவரது இலக்கியத் தடத்தை சரியாக மையப்படுத்தி எழுத எனக்கு அமையவில்லை. திண்ணை நாளிதழில் எஸ்.ராமச்சந்திரன் (எஸ்ஸார்ஸி) எழுதியுள்ள கட்டுரையைப் பகிர்கிறேன். அதற்கான இணைப்பு —– இது.
அவருக்கு என் அஞ்சலி.
(image courtesy:puthu.thinnai.com)