‘ஏக் கப் ச்யா’ – மராத்தித் திரைப்படம்


220px-Ek_Cup_Chya

‘ஏக் கப் ச்யா’ – மராத்தித் திரைப்படம்

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சென்ற ஞாயிறு ‘ஏக் கப் ச்யா’ என்னும் மராத்திப் படத்தைப் பார்க்க அமைந்தது. ஒரு திரைப்படம் வணிகரீதியில் தயாரிக்கப்படும் போது அது வசூல் செய்ய வேண்டும் என்பதைத் தவிர்த்து எந்தச் சரடும் நமக்குக் கிடைப்பதில்லை. ஏக் கப் ச்யா என்றால் ஒரு கோப்பைத் தேனீர் என்று பொருள். அரசு அலுவலகங்களில் ‘டீ செலவுக்கு’ என்று எதாவது லஞ்சம் தர வேண்டி இருப்பதையே இந்தத் தலைப்பு நமக்கு குறிப்பால் உணர்த்துகிறது.

சற்றே பிரசார நெடியும் ஆவணப் படமோ என்று அஞ்சுமளவு தகவல் உரிமைச் சட்டம் பற்றிய விவரங்களும் உள்ள படம் இது. ஒரு அரசுப் பேருந்து நடத்துனர் கிராமத்தில் விவசாயம் செய்யும் குடும்பத்தவர். அவரது தாயார் மனைவி, நான்கு குழந்தைகள் என பெரிய குடும்பம். அவர்கள் அதிக பட்சம் 500 ரூபாய்க்கு மின்சாரம் பயன்படுத்தக் கூடும். ஆனால் 73000 ரூபாய் என கட்டணத்துக்கான ‘பில்’ வருகிறது. மின்வாரியம் மீண்டும் மீண்டும் அவர் அலைந்து அணுகும் போதெல்லாம் பணத்தைக் கட்டி விட்டுத்தான் அவர் புகார் தர முடியும் என்று அவர் நிலையைப் புரிந்து கொள்ள மறுக்கிறது. மின் இணைப்பைத் துண்டித்ததால் அவர் வீட்டில் படிக்கும் குழந்தைகள் சிரமப் படுகின்றனர். அவரது தாயார் இருட்டில் தவறி விழுந்து கால் உடைந்து துன்பப் படுகிறார். ஒரு மனு எழுத இந்த நடத்துனருக்குப் பின்னணியும் கல்வி அறிவுமில்லை. அவரது பள்ளிக்கூடப் படிப்பில் உள்ள மகன் தனது ஆசிரியரிடம் போகலாம் என்றால் இவருக்கு அது அவமானமாகப் படுகிறது. மூத்த மகன் இவருடன் பேசுவதே இல்லை. மன உளைச்சலில் Schizophrenia என்னும் நிலைக்கே போகிறார். ஒரு சமூக ஆர்வலர் மருத்துவர். தமது கணவரை சமூக விரோதிகளின் பழி வாங்கலில் இழந்தவர். அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழி இந்தப் பிரச்சனையை எதிர்த்துப் போராட இவருக்கு வழி காட்டி இறுதியில் இவருக்கு நியாயம் கிடைக்கிறது. 2004ல் திரையிடப் பட்ட இந்தத் திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றது. விருது எதுவும் கிடைக்கவில்லை. சுமித்ரா பவே மற்றும் சுனில் சுக்தாங்கர் என இருவர் இணைந்து இதை இயக்கியுள்ளனர். ஆவணப் படம் போல அல்லாமல் இதை இன்னும் கூர்மையாக எடுத்திருக்க முடியும். குறிப்பாக அரசு அமைப்புகள் மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முனைப்போடு இல்லாமல் இருப்பது நல்ல சரடு. அதை இன்னும் அழுத்தமாகக் காட்டி இருக்க முடியும். மராத்தி நடிகர்கள் அனைவருமே தமது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

(image courtesy: wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s