நோய் எதிர்ப்பு மருந்துகளை மீறி விடும் பாக்டீரியாக்கள் – தினமணி எச்சரிக்கை
நோய் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர் குறிப்பிட்ட அளவு நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவது ஒரே எதிர்ப்பு மருந்தைத் திரும்பத் திரும்ப எடுத்துக் கொள்வது இவை உள்ளிட்ட பல காரணங்களால் நோய் எதிர்ப்பு மருந்துகளை மீறி பாக்டீரியாக்கள் உயிர் கொல்லுமளவு ஆபத்தாகி விட்டன என எச்சரிக்கிறது தினமணித் தலையங்கம். இப்போதிருப்பதை விட மேம்பட்ட நோய் எதிர்ப்புள்ள மருந்துகள் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்றும் கூறுகிறது. கண்டுபிடிப்புக்களில் மருந்து நி/றுவனங்கள் செலவிடுவதில்லை என்றும் கவலை தெரிவிக்கிறது. அரசாங்கங்கள் ஆயுதங்கள் மீது செலவு செய்யாமல் மக்கள் ஆரோக்கியம் மீதும் கல்வி மீதும் செலவு செய்யும் பொற்காலம் வர வேண்டும். ஆரோக்கியம் தனியார் கையில் வணிகமாகவே நின்று விடும் என்பதையும் எல்லா நாட்டு அரசுகளும் உணர வேண்டும். துப்பாக்கி முனையில் இல்லாமல் பயங்கரவாதம் இல்லாமல் தனது தரப்பை எடுத்துரைக்கும் பண்பாட்டை உலகம் காண வேண்டும். ஆயுதம் அப்போது அத்தியாவசியச் செலவாக இருக்கவே இருக்காது.
தினமணி தலையங்கத்துக்கான இணைப்பு ———— இது.
(image courtesy:123rf.com)