மகாராஷ்டிராவில் நதி நீரில் பாலம் உடைந்தது தரும் பாடம் – தினமணி தலையங்கம்
மகாராஷ்டிராவில் வெள்ளத்தின் வேகத்தில் பாலம் உடைந்ததாகவே நான் கருதிக் கொண்டிருந்தேன். அது பிரிட்டிஷார் காலத்திலேயே கட்டப் பட்டது – நூறாண்டு கடந்தது என்னும் விவரங்களை த் தரும் தினமணி தலையங்கத்தில் இது மனித அலட்சியத்தால் விளைந்தது. ஒரு அறிவிப்புப் பலகை பயன் தந்திருக்கும் என்று வாதிடுகிறது. பாலத்தை முற்றிலும் போக்குவரத்துக்கு இல் லை என்று நிறுத்தி இருக்கலாம். வேறு பாலம் விரைவில் அமைய வழி செய்திருக்கலாம். நாம் மக்களின் பாதுகாப்பை உரிய முக்கியத்துவத்துடன் உறுதி செய்வதே இல் லை. இது மாற வேண்டும். தினமணியில் கூறுவது போல் எல்லாப் பாலங்களுமே இப்போதே தணிக்கை செய்யப் பட்டு உறுதி பற்றி நிபுணர் சான்றிதழ் தர வேண்டும். தினமணி தலையங்கத்துக்கான இணைப்பு ——– இது.
(image courtesy:business-standard.com)