தேவுள் – மராத்தித் திரைப்படம் – வளர்ச்சியை விழுங்கும் மூட நம்பிக்கை


220px-Deool.jpg

தேவுள் என்றால் கடவுளின் உறைவிடம் என்று பொருள்.

உமேஷ் வினாயக் குல்கர்னி இயக்கத்தில் 2011ல் வெளியான தேவுள் என்னும் மராத்தித் திரைப்படம் டிடி இந்தியா தொலைக்காட்சியில் 4.9.2016 இரவு பார்க்கக் கிடைத்தது.

‘அன்னா’ என அன்புடன் அழைக்கப்படும் ஒரு படித்த அந்தக் கிராமத்தவர் அங்கே சிலகாலம் தங்கி ஒரு மருத்துவமனையை பொது மக்கள் மற்றும் அரசு உதவியுடன் கட்ட எண்ணி அந்த ஊரின் முக்கிய அரசியல் புள்ளியுடன் இணைந்து செயற்படுகிறார். அந்த அரசியல்வாதியும் ‘வளர்ச்சி’ என்னும் கோஷத்துடன் இதை கிராமம் மற்றும் தனது சொந்த அரசியல் முன்னேற்றத்துக் பயன்படுத்த முடிவெடுத்து அமைச்சரின் நல்லாசியையும் மருத்துவமனைக்குக் கிடைக்கச் செய்கிறார். அந்த கிராமத்தில் முதுமக்கள் தாழி கிடைப்பதற்காகத் தோண்டும் வேலை நடக்கிறது. தொன்மையான பண்பாடு அங்கே இருந்தது தெரிகிறது. மருத்துவமனைக்கான அரசு அறிவிப்பு வரும் சில நாட்கள் முன் கிராமத்தில் மாடு மேய்க்கும் கெஷ்யா என்னும் இளைஞனின் பகல் கனவு ஒன்றில் ஒரு மரம் ‘தத்தாத்ரேயர்’ என்னும் இறைவனின் வடிவமாக வருகிறது. அதாவது மரம் கடவுளாகவே அவன் கனவில் மாறி விடுகிறது. இதை மற்றவர்களிடம் அவன் கூற மெதுவாக அங்கே அந்த மரத்தை ஒட்டி நம்பிக்கை உருவாகிறது குறிப்பாகப் பெண்களிடையே. விரைவில் கிராமத்தின் (பொம்மை) பஞ்சாயத்துத் தலைவியையும் சேர்த்து ஒரு பெரிய கும்பல் அங்கே கோயில் கட்டும் முடிவை முன்னெடுக்கிறது. அமைச்சர் இதை அரசியலுக்குப் பயன்படுத்த முடிவெடுக்க மருத்துவமனைக்கான திட்டம் அடியோடு ஒழிகிறது. கெஷ்யாவின் மாடு புனிதமாகிறது. மரத்தருகே தத்தாத்திரேயர் கோயில் எழும்ப ஊடகத்தின் உதவியும் தொழில்நுட்பத்தால் ஆயிரக்கணக்கானவரைத் தொடர்பு கொள்ளும் தந்திரமும் சேர பெரிய தலமாகி கடைகள் உணவங்கள் என கிராமம் கொழிக்கிறது. நல்ல பள்ளிக்கூடம் அல்லது மருத்துவமனை வரவே இல்லை. கெஷயாவின் பசு ஒரு படிமமாக அமைகிறது. உண்மையான நம்பிக்கை உள்ள அவன் மனம் நோவது போல கும்பலுக்குக் காட்சியான அந்தப் பசு மெல்லச் சாகிறது. கெஷையாவுக்கு அந்த பசுவுக்கு மருத்துவம் ஏற்பாடு செய்ய யாருமே உதவாத போது தான் தன்னால் மிகப்பெரிய விபரீதம் நிகழ்ந்தது புரிகிறது. மருத்துவமனையைக் கனவு கண்ட அன்னா தனது மனனிருக்கும் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்து விட்டதால் தனியனாகிப்போன கெஷையா அதிரடியாக ஒரு முடிவெடுக்கிறான். மூலவிக்கிரகமான தத்தாத்திரேயரின் பஞ்ச லோக விக்கிரகத்தைக் கொண்டு வெகுதூரத்தில் உள்ள நதியில் போட்டு விடுகிறான். வருமானம் அடிபட்டதால் மீண்டும் ஒரு புது விக்கிரகத்தைக் கோயில் நிர்வாகம் நிறுவுகிறது.

வளர்ச்சி என்பது என்ன? முன்னேற்றம் என்பது என்ன? கடவுள் நம்பிக்கை என்பது என்ன? கடவுள் ஒரு பண்டமாக மையப்படுத்தப் படுவது என்ன? என்னும் கேள்விகளை மிகவும் நாசூக்காகவும் அழுத்தமாகவும் கையாண்டு விவாதிப்பதில் இந்தத் திரைப்படம் வெற்றி அடைகிறது.

அது வென்றுள்ள விருதுகள்:

2011: National Film Award for Best Feature Film
Citation: For its witty, satirical and penetrative account of the politics involved in the commercialization of religion in India. Through a wonderfully authentic depiction of village life, mentality and gesture, Deool has a social, religious and commercial sweep, even as it individualizes each of its characters and endows them with a language and space of their own. The film ironically shows the wholehearted acceptance of commodified and clamorous religiosity in a land plagued by all the serious problems the country faces today, and it does so with laughter that is only slightly tinged with cynicism.
2011: National Film Award for Best Actor – Girish Kulkarni
Citation: For his role as Kesha, the good hearted village simpleton, who inadvertently sets tumultuous events in motion, is circumspect and tenderhearted. Shorn of histrionics, his performance depends largely on his face and eyes to convey the multitudinous emotions in his mind which he cannot utter. He is controlled yet ingenuous, moving towards the beginnings of an understanding of the world around him, a move that transforms itself unselfconsciously into a spiritual quest.
2011: National Film Award for Best Screenplay (Best Dialogue) – Girish Kulkarni
Citation: For its immensely varied and textured use of language that is both an authentic and an energetic reflection of the different sections of life shown in the film: the language of the village, of politicians, of the scholar and much else. His dialogues – robustly rustic yet influenced by urban vocabulary – is characteristic of the Indian scene today.

(image and award details courtesy: wiki)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s