தமிழ்ச் சூழலில் எழுத்தாளனின் அவல நிலை – சாரு நிவேதிதாவின் இரண்டு கட்டுரைகள்
தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்கள் பத்திரிக்கைகளாலும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களலும் எப்படி நடத்தப் படுகிறார்கள், எந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதைப் பல முறைகள் சாரு நிவேதிதா பதிவு செய்திருக்கிறார். ஒரு சமூகத்தின் திருப்பு முனைகள் எழுத்தாளனாலேயே துவங்கி வைக்கப் படுகின்றன. கதை எழுதுகிறவரோ, கட்டுரை அல்லது உண்மை நிலவர விவரம் எழுதும் பத்திரிக்கையாளரோ இவர்களே சமுதாய மாற்றத்துக்கான வித்துக்களை விதைக்கிறவர்கள்.
என் மகனுடன் ஒரு உரையாடலில் தகுந்த மரியாதையும் சன்மானமும் ஒரு எழுத்தாளனுக்குத் தரப்படுவதில்லை என்று விளக்கிய போது அவன் சாதாரணமான தொனியில் ” உன் கருத்து பிரசுரம் அல்லது ஒளிபரப்பு ஆவதே ஒரு பெரிய சன்மானமில்லையா? அதற்காகத் தானே நீ முனைகிறாய்?” என்று கேட்டான். நான் ஒரு சமூகம் எழுத்தாளனை நடத்தும் விதம் அதன் தராதரத்தை வெளிப்படுத்துகிறது என்று பதிலளித்தேன். எதேச்சையாக சாரு இதே சமயத்தில் இந்தக் கட்டுரைகளை அடிவயிற்றில் எரியும் நெருப்பிலிருந்து எழுதியிருக்கிறார். அவருடன் நான் மிகவும் உடன் படுகிறேன்.
சாரு நிவேதிதாவின் இரண்டு கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே: