வறுமையையும் உடல் ஊனத்தையும் தாண்டிய மாரியப்பனின் சாதனை
வறிய பின்னணியும், உடல் ஊனமும் தன்னைத் தளர விடாமல் தன்னம்பிக்கையும் போர்க்குணமுமாக ‘மாற்றுத் திறனாளிகள்’ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் சாதனை சிந்து, சாட்சி போன்றவர்களின் சாதனையை விட ஒரு படி மேலானது. பாதம் இல்லாத ஒரு காலை அவர் விந்தியபடி ஓடிவந்து உயரம் தாண்டும் காணொளி யார் மனதையும் உருக்கும். வாழ்க்கையில் போராடவும், நிமிர்ந்து நின்று ஜெயித்துக் காட்டவும் இளைய தலைமுறைக்கு முன்னுதாரணமாவது. அவருக்கு நம் வாழ்த்துக்கள். தமிழக அரசு அவருக்குத் தந்துள்ள கௌரவம் மிகவும் பாரட்டுக்கு உரியது. அவர் பற்றிய தினமணி செய்திக்கான இணைப்பு —- இது.
(image courtesy: dinamni.com)