சேர சோழ பாண்டிய பல்லவர் அமைத்த நீர்நிலைகள் போனதெங்கே?- தினமணி கட்டுரை
என்னுடைய இணைய தளத்தில் மற்றும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று நூறு முறைகள் கூடத் திரும்பத் திரும்பப் பல சமூக ஆர்வலர்கள் கேட்கும் கேள்விகள் இவை. ஏன் நாம் சிறிய பெரிய நீர்நிலைகளைத் தூர்த்தோம்? ஆக்கிரமித்து வருகிறோம்? எஞ்சியுள்ளவற்றை நாம் ஏன் தூரெடுத்துப் பேணவில்லை? பிற மாநிலங்கள் குறிப்பாக ஆந்திரம் கர்நாடகாவை ஒப்பிட நம் அணுகுமுறை ஏன் நீண்டகாலக் கண்ணோட்டத்தில் இருக்கவில்லை?
“தமிழ்நாடு தனியாகப் போய்விடும்” என்று ஒரு பழுத்த அரசியல்வாதி கர்நாடக தமிழ்நாட்டுக்கிடையான காவிரிப் பிரச்சனைப் போராட்டத்தில் உளறிக் கொட்டுவதை ஊடகத்தில் பார்த்தேன். ஐ எஸ் போன்ற அமைப்புக்களை மிகப் பெரிய வல்லரசுகளாலேயே சமாளிக்க முடியவில்லை. சுண்டெலி போல இந்தப் பெரியவர் உளறிக் கொட்டுவது நம் சிந்தனையின் நம் மக்களின் விழிப்புணர்வின் தராதரத்தைக் காட்டுகிறது.
ஆவேசமும், நாடி நரம்பு முறுக்கேற்றமுமாகவே அலையும் நம் அரசியல் தலைவர்கள் நம்மிடம் இருந்த இருக்கிற நீர்நிலைகள் பற்றிப் பேசுவதே இல்லை. நாம் கடலில் சென்று வீணாகாது மழை வரும் போது சேமிக்கக்கூடிய சிறிய சிறிய நீர் ஆதாரங்களே நிலத்தடி நீரை உயர்த்துகின்றன.
தினமணியின் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது எனக்கு அன்னா ஹஸாரே நினைவுக்கு வந்தார். அவர் தமது கிராமமான ரானேஜி காவ் சிந்தியில் சிறிய சிறிய நீர்நிலைகளை அவர் உருவாக்கி விவசாயிகளுக்கு நல்வழி காட்டினார். குட்டைகள் போன்ற நீர்நிலைகள் அமைத்தார் அன்னா ஹஸாரே. அது கிராமத்துக்கு மிகவும் பயன்பட்டது.
தமிழ்ச் சமூகம் தன்னைச் சுயவிமர்சனம் செய்து மேற்செல்ல வேண்டிய காலம் இது. கலை, விளையாட்டு இலக்கியம் ஆகிய தளங்களில் கர்நாடகம் தமிழ்நாடு நல்லுறவில் இருக்க நல்ல மனம் கொண்டோர் முனைய வேண்டும். இருபக்க அரசியல்வாதிகளிடமிருந்து நாம் வெறுப்பை வளர்த்துக் கொள்ளக் கற்றுக் கொள்வது இரு மாநிலத்திலும் வேலை செய்யும் இளைஞருக்கு பாதிப்பாகும். நம் தேச ஒற்றுமை பற்றி எப்போதுமே பொறுப்போடு சிந்திப்பது ஒரு போதனை அல்லது வழிகாட்டுதல் என்று அணுகுகிறோம். அது கட்டாயம். எப்போதுமே கட்டாயம்.
தினமணி கட்டுரைக்கான இணைப்பு ———— இது.
(image courtesy:mapsofindia.com)