மௌனியின் பேரக் குழந்தைக்கே அவர் எழுத்தாளர் என்பது தெரியாது- சாருநிவேதிதா
தமிழ் ஹிந்துவில் சாரு நிவேதிதா எழுதியுள்ள ஒரு பதிவுக்கான இணைப்பு ——— இது.
தற்செயலாக மௌனியின் கொள்ளுப் பேத்தியை சந்தித்த போது அந்தக் குழந்தைக்கு மௌனி என்னும் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை தனது மூதாதையர் என்பது தெரியவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கான அர்த்தம் மௌனியின் குடும்பத்தாரை விமர்சிப்பதல்ல. உண்மையில் நம் உறவு அல்லது நட்பு வட்டத்தில் ஒருவர் பார்க்கும் வேலையே அவரது அடையாளமாகக் கருதப்படுகிறது. எழுத்து என்பது மரியாதைக்குரிய ஒரு வேலையாகக் கருதப் படவில்லை. இதனால் யாரும் ஒரு எழுத்தாளரை அவரது எழுத்து சார்ந்து மரியாதைகாகக் கருதுவதில்லை. அவரே சுமாரான வருவாயில் ஒரு வேலைக்குப் போனால் அது அடையாளமாகக் கருதப் படும். ஜனவரி 2016ல் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனை ஒரு கலந்துரையாடலில் சந்திக்க முடிந்தது. அப்போது வந்திருந்தவர்களில் அனேகர் எழுத்தாளர்கள். அவர்கள் ஜீவனத்துக்காக என்ன வேலைக்குப் போகிறார்கள் என்பதைக் கேட்டார் ஒரு ஆள் விடாமல். ஒருவர் தன் நிறுவனத்தின் பெயரைச் சொன்னதுமே ” அங்கேயா வேலைக்கிப் போறே? அதான் உன் அடையாளம் ” என்றார். நுட்பமாக அவர் நம் சூழலைப் புரிய வைத்தார்.
(image courtesy:neetchi.com)