நம் போர் வீரர்களின் கடினமான பணிச்சூழலும் அர்ப்பணிப்பும்- வாட்ஸ் அப் காணொளி
கருத்துரிமைக்கு உண்மையான காவல் நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அந்த பெருமிதமான சட்டத்தைக் காப்பாற்றும் மைய அரசு. அந்த அரசு அந்த அரசியலமைப்புச் சட்டம் இவற்றைக் காப்பது அன்னியரது ஆதிக்கத்தில் இருந்து காப்பது நமது முப்படை வீரர்களே. மிகவும் தனிமையான இடங்கள், இரவு பகல் பாராத உழைப்பு, உயிருக்கு ஆபத்தான சவால்கள் இவற்றை நாம் தரும் சொற்ப சம்பளத்துக்காக அவர்கள் செய்யவில்லை. உண்மையான அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள். கருத்துரிமையை வைத்து தேச விரோதமாகப் பேசுவேன் , போரே வேண்டாம், பயங்கரவாதம் பரவாயில்லை என்பவர்கள் அற்ப விளம்பரம் தேடுவதே உண்மை. உலகின் மிகக் குறைந்த நாடுகளில் மட்டுமே இந்தக் கருத்துச் சுதந்திரம் உண்டு.
இந்தக் காணொளி ராணுவ வீரர்களின் பணியை அதன் வலியை அவர்களது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவது. அதற்கான இணைப்பு – —- இது.
பகிர்ந்து கொண்ட வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.
(image courtesy:livemint.com)