வாசிப்பு பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்
வாசிப்பு என்பது மனக்கிளர்ச்சி தருவ்தாகவும் பொழுது போக்குவதாகவும் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் நம்முள் நிறையவே ஊறி விட்டது. நாம் வாழ்க்கையை ஒரு நுட்பமான தரிசனமோ புரிதலோ இல்லாத பொழுது போக்கும் கட்டாயமாகக் காண்கிறோம். இது நம்மை சிந்தனையில் மேற்செல்ல விடுவதில்லை. பிற சிந்தனைகளை உள்வாங்கி முதிர்ச்சியும் புரிதலுமான நிலையை நோக்கி நாம் நகர்வதில்லை.
எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரையின் இந்தப் பகுதியைப் பார்ப்போம்:
—————————
தன்னல வாழ்க்கை
கிட்டத்தட்ட எல்லாருக்குமே தங்கள் வாழ்க்கை, தங்கள் வேலை, தங்கள் குடும்பம் என்ற கவலைகளும் அக்கறைகளும் ஆர்வங்களும் தங்களைச் சுற்றியே அமைகின்றன. இவற்றில் எதுவுமே சமூகத்தின் தொடர்பு இல்லாமல் தனித்து இயங்குவதில்லை. ஆனால், பொதுவாக யாருமே இதை ஆழமாக உணர்வதில்லை. இதனாலேயே பல நடைமுறைச் சிக்கல்கள் அவரவர் வாழ்க்கையில் தோன்றுகின்றன. இப்படித் தோன்றும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சரிவரக் கையாள வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தங்களை மீறி, தங்களுடைய குறுகிய உலகத்தைத் தாண்டிப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்க்க உதவுவதுதான் வாசிப்புப் பழக்கம். இது மிகக் குறுகிய நோக்கம் என்றாலும் பயனுள்ளது.
——————————-
அறிவு விசாலமடைவது அல்லது மேலும் நலமான நாகரிகமான வாழ்க்கைக்கு நகர்வது என்னும் குறுகிய நோக்கில் தொடங்கினாலும் தவறில்லை. ஆனால் நாம் புனைவு அல்லது கட்டுரைகளின் வழி புதிய சாளரங்களைத் திறந்து நமது சிந்தனையின் தேக்க நிலை மாறி புதிய தடங்களில் ஆழ்ந்து சிந்தித்து நம் வாழ்நாள் வீணாகாத பெரு நிலைக்கு நகர வேண்டும்.
எஸ்.ராவின் முழுக் கட்டுரைக்கான இணைப்பு ———- இது.