‘கபாலி’ போன்ற சினிமாக்கு செலவு செய்யும் நாம் புத்தகம் ஏன் வாங்கி வாசிப்பதில்லை- நாஞ்சில் நாடன்
நம்முடன் ஐந்துக்கும் பத்துக்கும் பேரம் பேசும் ஆட்டோக்காரர், ‘டிப்ஸ்’ கிடைத்தால் மகிழும் ‘வாட்ச்மேன்’ அல்லது உணவக ‘சர்வர்’ போன்ற ஏழை மக்கள் கபாலி படம் முதல் நாள் பார்க்க 500, 1000 என செலவு செய்தார்கள்.
ஆனால் ஒரு திரைப்படம் என்னும் காணொளியில் லயிக்கும் அவர்களால் ஏன் மனதில் நின்று நம் சிந்தனையைத் தூண்டும் ஒரு நூலை வாங்க முடிவதில்லை? ஏன் வாசிப்புப் பழக்கமில்லை? நாஞ்சில் நாடனோ அல்லது வேறு எந்த எழுத்தாளரோ வாசிப்பின் மகத்துவத்தை வலியுறுத்துவது தனது நூல் வாசிக்கப்பட வேண்டும் என்பதால் அல்ல. வாசிப்பின் அனுபவம் அதன் தாக்கத்தால் கூர்மைப்பட்ட சிந்தனை, மனிதநேயம் பற்றிய புரிதல் இவை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றே அந்த ஆதங்கம்.
ஒரு சமூகமே ஒரு தலைமுறையே வாசிப்பில்லாமற் போவது பேரிழப்பு. பெரிய சோகம்.
அவரது சிந்தனையை பதித்த தமிழ் ஹிந்து இணைப்பு——> இது.