அசோகமித்திரனின் ‘மானசரோவர்’ நாவலில் நவீனத்துவம் – பெருந்தேவி கட்டுரை
நவீனத்துவம் முதல் உலகப்போருக்குப் பின்னான தொழிற்புரட்சியில் தொடக்கம் கொண்டு (1920கள் தொடங்கி) ஐரோப்பாவில் ஓவியம் மற்றும் எழுத்து இரு தளங்களிலும் நிலை கொண்டது. தமிழில் நாம் படைப்புக்களின் வழியே நவீனத்துவம் பற்றிய புரிதலை நோக்கி நகரலாம். 1980களுக்குப் பின் ஆங்கில மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களில் பின் நவீனத்துவம் உருக்கொண்டது. அந்த காலம் வரை தான் நவீனத்துவம் என்று யாருமே அறுதியிடவே முடியாது. புனைவில் நவீனத்துவக்கூறுகள் என்றும் தொடர்பவை. அவை பிரிக்கவே முடியாதவை என்று கூட நாம் கருதலாம்.
தமிழில் அசோகமித்திரன் நவீனத்துவத்தை நோக்கிய நகர்வில் பங்களித்தோரில் மூத்தவர். அவரது ‘மானசரோவர்’ நாவல் வழியாகப் பெருந்தேவி நவீனத்துவம் பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தருகிறார். காலச்சுவடு இலக்கிய இதழில் வெளிவந்த அவரது கட்டுரையின் ஒரு பகுதி இது:
———————————–
பெர்மனின் கருத்துகளின் அடிப்படையில் பார்க்க, நவீனத்துவ எழுத்துச் செயல்பாடு என்பது மனிதர்கள் நவீனமயமாக்கத்தின் மாந்தர்களாகும், பொருட்களாகும் விதங்களை எழுதுவது; குறிப்பாக நவீனமயமாகிற உலகில் தங்களுக்கென ஒரு பிடிமானத்தைப் பெற, அவ்வுலகில் தாங்கள் பொருந்தியிருக்க மனிதர்கள் மேற்கொள்ளும் யத்தனங்களை, பார்வைகளை, அவற்றின் போதாமையை, பொருத்தத்தை எழுதுவது எனப் புரிந்துகொள்கிறேன். நவீனத்துவ எழுத்துச் செயல்பாட்டுக்குச் செய்யப்பட்டிருக்கிற பல வரையறைகளில், அதைப்பற்றி இருக்கிற பல புரிதல்களில் இது ஒரு வரையறை, புரிதல் எனக் கொள்ளலாம்.
______________________
காலச்சுவடு இதழில் வெளிவந்த பெருந்தேவியின் கட்டுரைக்கான இணைப்பு ————— இது.