ஜெயந்தி சங்கரின் சிறுகதை ‘மெலிஸாவின் தேர்வுகள்’
சமகால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் என்னைப் பெரிதும் ஈர்ப்பவை. சமகால வாழ்க்கை திடீரென எங்கிருந்தோ வந்ததல்ல. இன்றைய பிரச்சனைக்கான மூலம் ஒரு தலைமுறை தள்ளிப் போட்ட அல்லது கண்ணை மூடிக் கொண்டு விட்ட ஒரு கேள்வி. எனவே தீர்வு சமகாலத்துடையது மட்டுமல்ல. நம் இயல்பில் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பது. தொன்மத்தைக் கொண்டாடுவோர் எல்லாப் பிரச்சனைகளும் சமீபத்தில் முளைத்தவை என்றே சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
மேற்கத்திய கலாச்சாரம் என்னும் சொல் மிகவும் எளிமையாக நம்மால் பயன்படுத்தப் படுகிறது. அதன் தாக்கம் அல்லது நீட்சி அல்லது மறுபதிப்பு நம் சமீபத்தில் வரும்போது நாம் வசதியாய் இது விதிவிலக்கு என்று மேலே நகர்வோம். சீனக்குடும்பத்து இளம் பெண் சிங்கப்பூரில் சமகாலத்தில் தனது ‘உடன்வாழ்’ துணையைத் தேர்ந்தெடுக்கும் இந்தக் கதையில் ஆசிரியரின் குரல் எங்குமே இல்லை. நவீனமான கதை இது. “பென் தன்னலமானவன்” என்னும் ஒரு சிறு மொழிதல் ஒரு இடத்தில் வரும். அது ஆசிரியரின் குரல் இல்லைதான். இருந்தாலும் அதையும் விட்டிருந்தால் இன்னும் நுட்பமாய் இருக்கும்.
மனித வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் அதுவும் பல பண்பாட்டு இனங்களைத் தாண்டிய அவதானிப்பில் புரிதல் நமக்கு எளிதானதல்ல. அரிய சாளரம் ஒன்றை இந்த சிறுகதையில் திறக்கிறார் ஜெயந்தி.சிறுகதைக்கான இணைப்பு —————– இது.