ஆணாதிக்க மட்டரகப் பேச்சை எதிர்த்து மிச்செல் ஒபாமாவின் உரை
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரப் பேச்சில் வேட்பாளர் டிரம்ப் பெண்களை இழிவு படுத்தும் விதமாகப் பலவும் பேசினார். அதற்கு பதில் தரும் முதற் பெண்மணி மிச்சல் ஒபாமா பெண்களை மரியாதையாக நடத்தும் சமூகம் பற்றியும் பெண்கள் கால காலமாக எவ்வாறு நடத்தப் படுகின்றனர் என்பது பற்றியும் கூர்மையான உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்துகிறார். அதற்கான இணைப்பு மேலே.
இந்தியாவில் பல அரசியல் தலைவர்கள் பாலியல் வன்முறை குறித்தே பல உளறல்களைக் கொட்டி இருக்கிறார்கள். அப்போது நம் தலைவிகள் அல்லது பெண்ணியவாதிகள் ஒவ்வொரு முறையும் கடுமையான விரிவான கண்டனத்தைச் செய்திருக்க வேண்டும். ஆணின் விகாரமான சிந்தனை மற்றும் பேச்சு தட்டிக் கேட்கப் படும் அளவு வளரும் பருவக் குழைந்தகளுக்கு பெண்ணுக்குத் தர வேண்டிய கண்ணியம் பற்றிப் புரியும். மனதில் பதியும். மிச்செல் ஒபாமா இதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.
(image courtesy:youtube)