பாடலாசிரியருக்கு இலக்கிய நோபல் பரிசு- சாருநிவேதிதா எதிர்வினை


charu-header

பாடலாசிரியருக்கு இலக்கிய நோபல் பரிசு- சாருநிவேதிதா எதிர்வினை

டைலன் தாமஸ் என்னும் பாடலாசிரியருக்கு இலக்கிய நோபல் வழங்கப்பட்டதற்கு சாருநிவேதிதாவின் எதிர்வினையை இன்று வாசித்தேன். சக எழுத்தாளர் ஹாருகி முராகமிக்கு இந்த வருட பட்டியலில் இடம் கிடைத்தும் ஏன் பரிசு கிடைக்கவில்லை என மிகவும் மன வேதனைப் பட்டார்..’ Kafka on the Shore ‘ என்னும் முராகமியின் நாவல் மற்றும் ‘Vanishing Elephant’ என்னும் சிறுகதைத் தொகுதியை வாசித்திருக்கிறேன். மாய யதார்த்தம் வழியாக நுட்பமான நவீன கதை வடிவில் சிந்தனைக்குரிய களன்களை நம்முன்னால் விரிப்பவர் முராகமி. சாரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரையை இணைத்து தமது வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பாடல்கள் இலக்கியம் ஆனது பக்தி காலத்தில் இருந்திருக்கலாம். எளிமைப்படுத்தப்பட்ட இலக்கியமும் ஆழமில்லாத தத்துவப் பார்வை தெளிப்புக்களும் கவிதையான காலம் மலையேறி விட்டது. நவீன கவிதை நம் மனம் பழக்கப்படுத்திக் கொண்டு ஓளிந்து கொண்டிருக்கும் இரும்புக் கோட்டையை உடைத்து நம்மை சுயவிமர்சினம் செய்ய, விடை தெரியாத கேள்விகளை ஆழ்ந்து அவதானிக்கக் கோருவது. வைரமுத்து தனது கவிதைகள் ஆங்கிலத்துக்குப் போனால் நோபல் பரிசு கிடைக்கும் என்று நம்பியது உண்மையாகி விடும் போலிருக்கிறது.

மிகை, மாயை, காதுவருடியான தத்துவ சஞ்சாரம் போன்ற குப்பைகளைத் தாண்டி தீவிர எழுத்தும் வாசகனும் நவீனத்தில் வெகு தூரம் வந்து விட்ட காலம் இது. மறுபக்கம் வாசிப்பு குறைந்து வருவதும் கசப்பான உண்மை. நியூயார்க் டைம்ஸின் இந்தப் பகுதியைப் பார்ப்போம்:
———————————–
As reading declines around the world, literary prizes are more important than ever. A big prize means a jump in sales and readership even for a well-known writer. But more than that, awarding the Nobel to a novelist or a poet is a way of affirming that fiction and poetry still matter, that they are crucial human endeavors worthy of international recognition.
———————————–
தீவிர வாசிப்பு, ஆழ்ந்த வாசிப்பு, கற்பனை மிகுந்த புதிய கதவுகளை நோக்கிய திறக்கிற எழுத்து- வாசிப்பு இவை எந்த மொழியிலும் அர்ப்பணிப்பான தீவிர எழுத்தாளர்களிடம் மட்டுமே நிகழ்கிறது. இவர்களை அங்கீகரிப்பது கௌரவிப்பதும் ஆழ்ந்த தீவிர எழுத்துக்கள் படைப்புக்கள் மற்றும் நவீன இலக்கியம் வளர உதவும். அதிகம் வாசிக்காத நீதிபதிகள் தரும் விருதுகள் இந்தியாவில் சகஜம். நோபல் நம் தரத்துக்கு இறங்கிக் கொண்டிருப்பது கவலை தருவது.

சாருவின் பதிவுக்கான இணைப்பு ——————————- இது.

(reference courtesy:newyork times)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு, Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s