எழுத்து சோறு போடாதா?- – தமிழ் ஹிந்து தலையங்கம்
பண்பாட்டுத் தளத்தில் ஆய்வு, சிந்தனை, புனைவு , விமர்சனம், விவாதம் ஆகிய வழிகளில் எழுத்தாளர்கள் ஆற்றும் பணி மிகவும் முக்கியமானது. சமூக மாற்றம் எழுத்துக்களின் வழியே தான் தொடங்குகிறது.
எழுத்தாளர்கள் எப்போதும் பொருளாதார நெருக்கடியில் துயரப்பட வேண்டுமா என்னும் கேள்வியை எழுத்தாளர்கள்தான் எழுப்புவார்கள். ஊடகங்கள் ஒரு போதும் கண்டு கொள்ளாது. ஆனால் தமிழ் ஹிந்து ஒரு தலையங்கமே எழுதியிருப்பது மிகவும் ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பது. அதற்கான இணைப்பு —————— இது.
அரசாங்கமும் சமூகமும் வாசிப்புக்காக என்ன செய்ய இயலும் என மூன்றைக் குறிப்பிட்டிருந்தேன். முந்தைய பதிவில். அவை கீழே:
மூன்று முக்கியமான மாற்றங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியும்:
1. எல்லாப் பள்ளிகளிலும் மாணவருக்கு நூலகம் செல்லும் வகுப்பு வாரம் இருமுறை இருக்க வேண்டும் குறைந்தபட்சம். ஒவ்வொரு மாணவனும் தான் படித்த நூலைப்பற்றிய சுருக்கமான மதிப்புரையை பள்ளி இணையதளம் வழியாக மாதந்தோறும் வெளியிடுவதும் கட்டாயமாக்கப் பட வேண்டும்.
2. பொது மன்றங்களோ தொலைகாட்சியோ ஒவ்வொரு உரையாளரும் கேள்விபதில் பகுதிக்குத் தயாராக இருக்க வேண்டும் மற்றும் நூல்களைக் குறிப்பெடுத்துப் பேசுவோருக்கு மட்டுமே, பேசவோ அல்லது நாளிதழ்களில் கட்டுரை எழுதவோ வாய்ப்பளிக்க வேண்டும்.
3.எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாசிரியர்களுக்கு மின்னூல்கள் பற்றி இப்போது இருக்கும் மனத்தடை நீங்க வேண்டும். வருங்காலத்தில் மின்னூல்களே அதிகமும் வாசிக்கப்படும்.
வாசிப்புக்குச் செய்யும் ஒவ்வொரு முன்னெடுப்பும் எழுத்தாளனுக்கும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பயன் தரும்.