ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது – சில புரிதல்கள் -1
ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் இவற்றை செல்லாது என அறிவித்த பின் மக்களின் எதிர்வினைகளை நாம் நேரடியாகவே பார்க்கிறோம் . பலரும் தம் இன்னல்களைத் தாண்டி அரசின் நோக்கம் நிறைவேறுதில் பங்களிப்பதில் உற்சாகமாகவே இருக்கிறார்கள். பணத்தை பறிகொடுத்த பல அரசியல்வாதிகளும் சுற்றி வளைத்து மக்களுக்கு இவ்வளவு சிரமம் என்கிறார்கள். எவ்வளவு பந்த் போராட்டம் மக்கள் எத்தனையோ பார்த்தவர்கள். வங்கியின் பணமில்லா பரிவர்தனைக்குப் பழகிக்கொள்ளாதவர்கள் என்பதை எந்த ஊடகமும் அரசியல்வாதியும் நினைவு படுத்தவே இல்லை. ரயில்வே துறையில் தனது துணைவி வேலை பார்ப்பதைக் குறிப்பிட்டு “இப்போது நுற்றுக்குத் தொண்ணுறு பேர் இணையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்கிறார்கள்” என்பதைக் குறிப்பிட்டார். சம்பளம் பெரும்பாலான நிறுவனங்களில் வங்கியில் தான் வரவு வைக்கப்படுகிறது. எனவே இப்போது வயிறு எரியும் அரசியல்வாதிக்கு இந்த மாற்றம் மெல்ல மெல்ல நிறைவேறுவது சகிக்க முடியாத எரிச்சல். எங்கே இப்படியே மக்கள் நவீனத் தொழில் நுட்பத்தில் ஐக்கியமாகி பாமரத்தன்மையை இழந்தே விடுவார்களோ எனும் அச்சம் அரசியல்வாதிகளை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இதை முன்வைத்த மூளை தைரியம் நெடுநோக்கு என எல்லா விதத்திலும் இந்த மாற்றம் குறித்து நாம் ஒரு தொடராக விவாதிப்போம் நாளை முதல்.