ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் செல்லாது – சில புரிதல்கள் -3
ஆனால் அரசியல்வாதி மக்களுக்கு என்னென்ன தூபம் ஏன் போடுகிறார் என்பவை ஆழமான மனப்பாங்கு தொடர்பானவை. அடுத்த பகுதியில் பார்ப்போம். இந்த குறிப்புடன் சென்ற பகுதியை முடித்திருந்தேன்.
மக்களின் மனப்பாங்கு அரசின் உதவியை அதாவது பெரிய அளவிலான மானிய உதவியை நம்பி இருக்க வேண்டும் இது அநேகமாக நிறைவேறிவிட்ட ஒன்று. மக்களுக்கு எல்லா கட்சியும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி irantume தரும் வாக்குறுதி இலவசங்கள்.
அநேகமாக எல்லாக் கட்சிகளுமே மக்கள் தம் பிரச்சனைகளுக்கு தமது உதவியை வழிகாட்டுதலை மற்றும் ஆதரவை நாட்ட வேண்டும் என விரும்புகிறார்கள்.
எனவே மக்களின் பொறுமையின்மை மற்றும் அச்சம் இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதே இவர்கள் நோக்கம். மான்யம் இலவசம் இவற்றை நம்பி வாழும் மனப்பாங்கு தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள மக்களை விடுவதே இல்லை. ஒரு தாழ்வு மனப்பாங்காகவே இது நின்று விடுகிறது. மக்களை எப்போதும் கீழ் நிலையில் இருத்தி வைத்து விடுகிறது.
கறுப்புப் பணம் ஏன் இவர்கள் எதிரி என்பதை பொறுமையாக மக்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள் என்பதில் அரசியல்வாதிகளுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது.
கறுப்புப் பண ஒழிக்கப்படவே முடியாதது என்னும் தமது தீர்மானமான நம்பிக்கையை இவர்கள் மக்கள் மனதில் விதைக்க விரும்புகிறார்கள். சுதந்திர இந்தியாவில் இப்படி பெரிய முயற்சி நடந்தாலும் அது வெல்லாது என்று நிறுவி தமக்குப் படியளக்கும் கறுப்புப் பணக்காரர்களை மகிழ்விக்கும் முயற்சியே இது.
கறுப்புப் பணத்தைப் பற்றி டீ குடிக்கும் உதாரணம் மூலம் எளிதாக விளக்கலாம்.
நான்கு மாணவர்கள் நண்பர்கள். அனைவரும் நடுத்தர வர்க்கம். ஒரு நாள் ஒரு மாணவன் மற்ற மூவருக்கும் தேனீர் வாங்கித் தருகிறான். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் குடித்து விடுகிறார்கள். ஆனால் தினமும் அந்த மூவரும் இவனே வாங்கித் தரவேண்டும் என நிர்ப்படுத்தப்படுத்த அப்போது அந்த இளைஞன் தன்னால் இயலவில்லை என அலறுகிறான். அப்பா கொடுக்கும் கைச்செலவுப் பணம் மிகவும் குறைவே,
இப்படி அலறும் மாணவன் வரி செலுத்துவோர். அவன் சேலையில் எப்போதும் வாழ நினைப்பது ஏனையர்.
வரிக்கு வெளியே அரசின் கண்காணிப்புக்கு வெளியே புழங்கும் பணம் கண்டிப்பாக அரசின் வரிவழி வருமானத்தைத் தடுக்கிறது. மக்களுக்கு – அவர்களில் முறையாக வரிசெலுத்தி வரும் நல்ல உள்ளங்களுக்கு பெரிய சுமையை அது உண்டாக்குவது மட்டுமல்ல கெடுதி. அரசின் திட்டங்களுக்கான நிதி ஆதாரம் என்றுமே விரிய முடியாமற் செய்து விடுகிறது.
கருப்பு பணம் அரசியலில் விளையாடி ஊழல் அரசியல்வாதி மற்றும் கறுப்புப் பணக் கூட்டணி என்றும் நிலையானதாகி விடுகிறது. அதிகார அமைப்பை அதாவது அரசை ஊழல் வழி கட்டுப்படுத்துவதும் மாற்று பொருளாதாரம் ஒன்றையே நடத்துவதும் கறுப்புப் பணம் வழியாக சாத்தியமாகி விடுகிறது.
யார் வசதிக்கு வந்தாலும் என்னை அசைக்கவே முடியாது என கறுப்புப் பணம் சவால் விடுகிறது.
அரசுகளும் அமைச்சர் அதிகாரி எல்லோருமே பொம்மைகளாக கறுப்புப் பணக்காரர்களின் கைப்பிடிக்குள் என்பதே இதுவரை நிலவரம்.
இன்று இந்த இணை அதிகார அமைப்பை முறையான அரசு அமைப்புத் தட்டிக் கேட்டு விட்டது. எனவே தனது முகத்தை எல்லா பிரச்சனைகளுக்கும் நம்பும் பொது மக்கள் முன்னாடி தீர்வு தருவதாகக் காட்டும் இந்த அரசியல் கட்சி அமைப்புக்கள் மக்களைத் தூண்டி விடுகின்றன.
சிறிய தொழில் செய்யும் மீனவர் விவசாயி வியாபாரி மற்றும் வருவாய்க்குறைவானோர் இவர்கள் பெயரில் பெரிய மீனவர் விவசாயி மற்றும் பணப் பரிமாற்றம் வழி வருவாய் பெரும் வசதி படைத்த ஆட்கள் நிறையவே பயனடைகிறார்கள். இவர்கள் ஊடகம் மற்றும் அரசியல் தலைவன் வழி நல்ல திட்டங்களை எதிர்க்க ஒன்று திரள்கிறார்கள்.
கணக்கு வழக்கு இல்லாமல் வாழ்வாங்கு வாழத் துடிக்கும் இந்தக் கூட்டம் தான் கருப்புக்கு ஆதரவு திரட்ட ஒரு வாரம் கூட மக்கள் துன்பப படக் கூடாது என்னும் புதிய கருத்தை முன்வைக்கிறது.
இன்று நான் நான்கு நாட்களாக இருக்கும் மருத்துவ மனை வாசலில் நடமாடும் பண இயந்திரம் வந்தது. என்னால் பணம் எடுக்க முடிந்தது.
பெரிய மாற்றம் ஒன்று இத்தனையையும் மீறி நடக்கிறது . மன உறுதியுடன் செயற்படும் மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் வாழ்த்துக்கள் .