முதலாளித்துவத்தின் பேரெழுச்சி எதனால்? – வசந்திதேவி கட்டுரை
எனது முந்தைய பதிவு ஒன்றில் கம்யூனிஸம் ஏன் தனது இலக்குகளில் தொய்வுற்றது என்பது தொடர்பாக எழுதியிருந்தது கீழே:
————————–
சமத்துவத்தை அரசாங்கம் உறுதி செய்வதும், ஒரு கட்சி ஒரு சிந்தனை மட்டுமே ஆட்சி செய்யும் என்னும் அரசியல் கட்டமைப்பினால் மட்டுமே கம்யூனிசம் கனவாக நின்று விட்டது. ஜனநாயகமும் கம்யூனிசமும் ஒன்றாக இருக்கவே முடியாது என்ற போக்கு வலது சாரி அல்லது முதலாளித்துவ சிந்தனைக்கு உதவியாகி விட்டது.
ஆனால் கம்யூனிசம் எடுத்துக் கொண்ட இரு பெரிய கேள்விகள் இன்னும் விடை இல்லாமல் இருக்கின்றன: ஒன்று தொழிலாளிகளின் உரிமைகள் மற்றும் நல வாழ்வு சம்பந்தப்பட்டது. மற்றது வர்க்கங்களாக இருக்கும் சமூக அடுக்குகளுக்கு இடைப்பட்ட மிகப் பெரிய இடைவெளி. இதை கம்யூனிச அணுகுமுறை இல்லாமல் ஆராய்ந்தாலும் நமக்கு “திட்டவட்டமாக என்றுமே நிலைக்கும் ஏற்றத் தாழ்வைப் போக்க ஏன் நாம் முனைவதில்லை’ என்று மனதுள் கேள்வி எழும். அரசு இயந்திரம் மட்டுமே நிலையாக மக்கள் நலனை உறுதி செய்ய இயலும். உணவு, உடை, உறையுள், வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் இவை யாவும் அடிப்படை உரிமைகள் என உறுதி செய்யும் கொள்கையுடைய கட்சிகளும் அரசுமே இந்தியாவின் இன்றைய தேவை.
—————————-
அடித்தட்டு மக்கள் மற்றும் தொழிலாளிகளின் நலன் தொடர்பாக எந்த நம்பிக்கை தரும் பரிமாணமும் முதலாளித்துத்தில் கிடையாது. ஆனால் சுயபரிசீலனை செய்து கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகம் மற்றும் கருத்துரிமைக்கு நாங்கள் எதிரிகள் அல்லர் என்பதை இந்தியாவில் கட்சிக்கு உள்ளேயும் தமது இயங்குதலிலும் பிரதிபலித்தால் இன்று வலதுசாரி சக்திகளின் பேரெழிச்சுக்கு ஒரு சவால் இருக்கும். மோடி என்னும் ஆளுமை நம்பிக்கை தருபவர் ஆனால் அவர் பின்னால் நிற்கும் சக்திகள் அபாயகரமான திட்டங்களை வைத்திருப்பவை. இன்று இந்தியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு பெரிய பொறுப்பு வந்திருக்கிறது.
கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் வசந்திதேவியின் கட்டுரை இன்று தமிழ் ஹிந்து நாளிதழில் இதற்கு அழுத்தம் தருவது. கட்டுரைக்கான இணைப்பு ———–இது.