அஞ்சலி- டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா
‘குழந்தை மேதை’ என 8 வயது முதல் இசையில் சாதனை செய்து வந்த மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா தமது 86வது வயதில் இன்று காலமானார் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி உள்ளவர் அவர். புதிய தாளங்கள், ராகங்களை நிறுவிய மேதை அவர். வாய்ப்பாட்டைத் தவிர வயலின், கஞ்சிரா மற்றும் மிருதங்கம் வாசிக்கும் திறன் படைத்தவர்.
இசையில் அதிக ஞானம் இல்லை என்றாலும் மனதைத் தொடும் இசையை ரசிக்கும் ஆள் நான். நான் மிகவும் சிறுவனாயிருக்கும் போது ஒரு திருமண நிகழ்ச்சியில் அவர் பாட வந்திருந்தார். எங்கள் ஊரில் பெரிய கலைஞர்கள் வந்து பாடுவது அபூர்வம். எனவே ஊரே திரண்டது. என் மனதில் அவர் ஆழப் பதிந்தார். சினிமாவில் பாடகர் மற்றும் இசையமைப்பாளராகவும் அவரைப் பார்த்தேன். கர்நாடக சங்கீதத்தின் மீது எனக்கு அவர் வழியாக சில புரிதல்கள் நிகழ்ந்தன. அவருக்கு என் அஞ்சலி.
(image courtesy:wiki)